Categories: Cinema News latest news

இந்த பெருமை யாருக்கு கிடைக்கும்?..லேட்டா வந்தாலும் அண்ணாச்சி இதுல கிங் தான்!..

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் கஷ்டப்பட்டு தன்னுடைய அயராது முயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று ஓரளவுக்கு நல்ல இடத்தை பிடித்திருக்கின்றனர். அப்படி இருந்தும் சிலர் இன்னும் அழகு இருந்தும் திறமை இருந்தும் போராடி தான் வருகின்றனர்.

அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஆரம்பத்தில் அவருடைய கடையை விளம்பரப்படுத்தும் வகையில் விளம்பர படங்களில் நடித்தார். கூடவே முன்னனி நடிகைகளோடு ஆட்டம் போட்டு மக்களின் வெளிச்சத்தை பெற்றார்.

இதையும் படிங்க : விஜய் டிவி ரக்‌ஷன் சித்ராவிற்கு தொடர் தொல்லைகள் கொடுத்தாரா? சித்ராவின் மரண வழக்கில் புதிய திருப்பம்…

அதன் பின் நடிகராக வேண்டும் என்ற தன் ஆசையால் சமீபத்தில் அவரே தயாரித்து தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாமல் அடுத்த பட வேலைகளில் தான் பிஸியாக போகிறேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் ஹீரோவாக அறிமுகமான முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நம்ம சரவணன் அண்ணாச்சி. இதற்கு முன் யாரும் அதிக வயதில் ஹீரோவாக அறிமுகம் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது.

Published by
Rohini