வீடு மட்டும் ஒரு கோடி!… சம்பளமே இத்தனை லட்சமா?.. ஆல்யா மனசுக்கு காசு கொட்டுது போல!..
சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தன்னுடைய சம்பள விவரம் குறித்து தெரிவித்து இருக்கும் தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் ஆலியா மானசா. பின்னர் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். அது அவருக்கு ரசிகர்களிடம் பெரிய அளவு புகழை கொடுத்தது. நிறைய ரசிகர்களும் ஆலியாவிற்கு கிடைத்தனர்.
இதையும் படிங்க: ஆடியோ லான்ச்சுக்கு நோ… சக்சஸ் மீட்னா ஓகே.. விஜய் போடும் ஸ்கெட்ச்!…
பின்னர், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள் கல்யாணமே அவசரமாக நடந்தது. இது பலருக்கு ஆச்சரிய விஷயமாக இருந்தது. தொடர்ந்து உடனே இரண்டு குழந்தைகளை ஆல்யா பெற்றுக்கொண்டார். இருந்தும் தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டு சன் டிவிக்கு தாவினார்.
தற்போது இனியா சீரியலில் ஆல்யா மானசா முக்கிய நடிகையாக நடித்து வருகிறார். அவரின் கணவர் சஞ்சீவ் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். இருவரும் சீரியலில் பிஸியாக இருப்பது மட்டுமல்லாமல் விளம்பரம், யூட்யூப்பிலும் இருவரும் கல்லா கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 18 மணி நேர உழைப்பு வீணாப் போச்சே? ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?
மேலும், ஆல்யா சம்பளம் குறித்து கேட்ட போது 2022ம் ஆண்டு வரை இனியா தொடரில் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார். ஆனால் தற்போது 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அரை லகரத்தில் ஒருநாள் சம்பளமா என ரசிகர்களும் ஆச்சரியத்தில் உள்ளனர்.