Connect with us
rainbow

Cinema News

7ஜி ரெயின்போ காலணி 2-வுக்கு வந்த சிக்கல்!. இந்த தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலமையா?!..

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்து 2004ம் வருடம் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலணி. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தனது மகன் ரவி கிருஷ்ணாவுக்காக ஏ.எம்.ரத்தினம் தயாரித்த படம் இது.

செல்வராகவன் படங்களுக்கு பெரிய கிரேஸ் இருந்த காலம் அது. ஏனெனில், அவர் இயக்கிய காதல் கொண்டேன் படம் ரசிகர்களிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் ஒரு காலணியில் வசிக்கும் ஒரு ஊதாரி இளைஞர், அதே அடுக்குமாடி குடியிருப்பில் குடி வரும் ஒரு மார்வாடி பெண்ணின் மீது காதல் கொள்வதால் என்னென்ன நடக்கிறது என்பதுதான் 7ஜி ரெயின்போ காலணி படத்தின் கதை.

இதையும் படிங்க: மதுரையில் நடந்த சம்பவம்!.. கடைசி வரை காப்பாத்தணும்!.. சூப்பர்ஸ்டார் விதை விழுந்தது அங்குதான்!..

இதை செல்வராகவன் தனது ஸ்டைலில் திரைக்கதை அமைத்து ரசிகர்களை உருக வைத்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும் பெரிய பலமாக அமைந்து படம் ஹிட் அடித்தது. அப்படத்திற்கு பின் ரவி கிருஷ்ணா சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.

இப்போது 19 வருடங்கள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. செல்வராகவன் இயக்க, ரவி கிருஷ்ணா நடிக்க அவரின் அப்பா ஏ.ஏம்.ரத்தினம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில், நிதிபற்றாக்குறை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாமன்னன் மேடையிலேயே வடிவேலு சொன்ன அட்வைஸ்!. கடுப்பாகி முகம் சிவந்த மாரி செல்வராஜ்!..

20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் ஏ.எம்.ரத்தினம். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான இந்தியன் படத்தையும் இவரே தயாரித்திருந்தார். எத்தனை கோடி என்றாலும் சரி உடனே பணத்தை தயார் செய்து விடுவார். ஆனால், இப்போது பணத்தை புரட்ட முடியாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டாராம்.

சமீபத்தில் ஹைதராபாத் சென்ற ஏ.எம். ரத்தினம் இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருந்த படப்பிடிப்புக்கான பணத்தை தயார் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். எனவே, மீண்டும் 7ஜி ரெயின்போ காலணி 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாம்.

இதையும் படிங்க: ‘ஒருதடவ மட்டும் ப்ளீஸ்!…’ என்ற தனியார் டிவி… ஆதாரத்தை வெளியிட்டு பொங்கும் நடிகை… ஏங்க இப்டி!

google news
Continue Reading

More in Cinema News

To Top