More
Categories: Entertainment News

சீக்கிரம் டெலிவரி ஆகிடும் போலத் தெரியுதே!.. அமலா பால் வயிறு எப்படி பெருசாகிடுச்சு பாருங்க!..

நடிகை அமலாபால் இரண்டாவதாக ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வரும் நிலையில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது 8 மாத கர்ப்பிணியாக அமலாபால் உள்ள நிலையில் அவர் நிறைமாத வயிறுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். மலையாள நடிகையான இவர் தமிழ் மொழியில் நடித்து வெளியான மைனா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், தொடர்ந்து தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஹிப் ஹாப் ஆதி படம் ஹிட்டா?.. ஃபிளாப்பா?..PT சார் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

ஏ.எல். விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம், அனுஷ்கா நடித்து வெளியான தெய்வத்திருமகள் படத்தில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருப்பார். அந்தப் படத்திலிருந்து ஏ.எல். விஜய் மற்றும் அமலாபால் காதலிக்க தொடங்கிய நிலையில் விஜய்யை வைத்து ஏ.எல். விஜய் இயக்கிய தலைவா படத்தில் அமலாபாலை ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏகப்பட்ட சண்டைகள் வெடித்தன. அதன் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்ட நிலையில், ஏ.எல். விஜய் உடனடியாக இன்னொரு திருமணம் செய்து கொண்டு மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அன்பே சிவம் படத்துல இதை எல்லாம் கவனிச்சீங்களா? அடடே இவ்ளோ விஷயம் இருக்கா?

அமலாபால் கோயில் கோயில்களாக சுற்றி வந்த நிலையில், ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அமலாபால் தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு அவர் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது. மேலும் அடுத்ததாக லெவல் கிராஸ் படமும் வெளியாகிறது.

கர்ப்பிணியாக இருந்தாலும் தொடர்ந்து படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு மறக்காமல் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், மஞ்சள் நிற கவுனை அணிந்து கொண்டு தனது பெரிய வயிறு தெரியும்படி அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீக்கிரமே குட்டி அமலாபால் அல்லது ஜூனியர் ஜெகத் தேசாய் வரப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிகாலை சாப்பிட வந்த ரஜினி… தலைதெறிக்க ஓட விட்ட ஓட்டல் உரிமையாளர்…

Published by
Saranya M