அதிகாலை சாப்பிட வந்த ரஜினி... தலைதெறிக்க ஓட விட்ட ஓட்டல் உரிமையாளர்...

by sankaran v |   ( Updated:2024-05-25 01:21:21  )
Rajni
X

Rajni

ரஜினியிடம் 25 ஆண்டு காலம் உதவியாளராக இருந்தவர் ரஜினி ஜெயராம். ரஜினி படிக்காதவன், தம்பிக்கு எந்த ஊரு, மனிதன் போன்ற படங்கள் வந்த காலகட்டங்களில் ரொம்பவே பிசியாக இருப்பாராம். அதுவும் அப்போது இரவும் பகலுமாக படங்களில் நடிப்பாராம்.

அப்போது பசி, தூக்கம் மறந்து வேலை செய்வாராம் ரஜினி. அப்படி ஒரு சம்பவத்தை ரஜினி ஜெயராம் சுவாரசியம் குறையாமல் இப்படி சொல்கிறார்.

ரஜினியோட வீட்டுலயே தங்கிட்டு, அங்கேயே சாப்பிட்டு இருந்தேன். ஒரு நாள் நான் படுக்கும்போது தலகாணி நகன்று இருக்கு. நான் அப்படியே படுத்துருக்கேன். எனக்கே தெரியாது. ரஜினி சார் அங்க வந்து என் தலையைத் தூக்கிட்டு தலகாணியை வச்சிட்டுப் போயி படுத்துருக்காரு.

Padikathavan

Padikathavan

அவரு எனக்கு அப்படி செய்யணும்னு அவசியமே இல்லை என நெகிழ்கிறார் ரஜினி ஜெயராம். இது அடுத்த நாள் தான் அந்த வீட்டுல சமையல் வேலை பார்க்குறவங்க எங்கிட்ட சொன்னாங்க. அவ்ளோ பெரிய மனசு உள்ளவர் அவர். அடுத்த நாளும் எனக்கு அதே பீலிங்கா இருந்தது.

படிக்காதவன் படம் ஏவிஎம்மில் நைட் சூட்டிங் நடந்தது. 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்' என்ற பாடல் எடுத்தாங்க. மறுநாள் ஊட்டில சூட்டிங். நான் லக்கேஜை எல்லாம் எடுத்துக்கிட்டு முதல் நாளே அங்கு போயிட்டேன்.

ரஜினி சார் நைட் சூட்டிங் முடிச்ச உடனே பிளைட்ல கோயமுத்தூருக்கு வாராரு. அங்கு வந்ததும் எங்கிட்ட ஜெயராம் பசிக்குதுன்னு சொல்றாரு. அப்போ அதிகாலை 3 மணி இருக்கும். உடனே ஏர்போர்ட் பக்கத்துல ஒரு ரோடு போகுது.

இதையும் படிங்க... காதல் கோட்டை படத்தில் நடிக்க இருந்த முன்னணி நடிகர்… அப்பாவால் பறிபோன வாய்ப்பு…

அங்கே ஒரு சின்ன ஓட்டல். அங்கு போய் தோசை சாப்பிடுறாரு. கொஞ்ச நேரத்துல அங்கு இருந்தவங்க 'ரஜினி... ரஜினி...'ன்னு கண்டுபிடிச்சிக் கத்த ஆரம்பிச்சிட்டாங்க. உடனே அவங்ககிட்ட ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துட்டு அங்கிருந்து கிளம்பிட்டாரு. இது என் வாழ்க்கையிலயே மறக்க முடியாத ஒரு அனுபவம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story