More
Categories: Cinema News latest news

த்ரிஷ்யம் இயக்குனர் படத்தில் அமலா பால்!.. ஆடு ஜீவிதம் படத்துக்கு அடுத்து இன்னொரு ஜாக்பாட்டா?..

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக உள்ள நிலையில் மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் இந்த ஆண்டு வரிசையாக வெளியாகி வருகின்றன. பிருத்திவிராஜ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் அமலாபாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சர்ச்சையை கிளப்பியதே தவிர ஓடவில்லை.

Advertising
Advertising

இதையும் படிங்க: வைரமுத்துவுடன் போட்டி போட்ட ஏ.ஆர்.ரகுமான்!.. ஷங்கர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!.. செம அப்டேட்!..

அதே ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த மைனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த அமலாபால் இயக்குனர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏ.எல் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா மற்றும் தியா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். குடும்பத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்தனர்.

இதையும் படிங்க:இயக்குனர் செய்த அந்த சதி வேலை… விரட்டி அடித்த இளையராஜா… நடந்தது இதுதான்..!

ஏ.எல்.விஜய் உடனடியாக மறு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அமலா பால் கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிறை மாத கர்ப்பிணியாக உள்ள அமலாபால் இந்த ஆண்டு வெளியான ஆடு ஜீவிதம் படத்தின் புரமோஷனுக்கு எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் வந்திருந்தார்.

இந்நிலையில், அடுத்ததாக திரிஷ்யம் பட இயக்குனர் ஜித்து ஜோசப் தயாரிப்பில் அர்பாஸ் ஆயுப் இயக்கத்தில் உருவாகியுள்ள லெவல் கிராஸ் திரைப்படத்தில் அமலாபால் நடித்துள்ளார். வரும் மே 12-ஆம் தேதி அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவிலும் அமலாபால் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அமலாபால் நடித்துள்ள லெவல் கிராஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸை மதிக்காத ஓடிடி நிறுவனங்கள்!.. பகத் ஃபாசில் படம் பல கோடிக்கு ஓடிடியில் விற்பனையா?..

Published by
Saranya M

Recent Posts