Connect with us

Cinema News

Kanguva: அமரனை முந்தியது கங்குவா… முதல் நாள் வசூல் எத்தனை கோடின்னு பாருங்க…!

கங்குவா படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஞானவேல் ராஜா பெருமையுடன் தயாரித்த இந்தப் படத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ளார்.

350 கோடி பட்ஜெட்

Also read: ரஜினி, அமிதாப் இவர்களுக்கு இணையான அந்த அந்தஸ்தை பெற்ற நடிகை..அட நம்ம லேடி சூப்பர் ஸ்டாரா?

பாபிதியோல் மூர்க்கமான வில்லனாக நடித்துள்ளார். திஷாபதானி, யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, ஜெகபதி பாபு, நட்டி, கோவை சரளா உள்பட பலரும் நடித்துள்ளனர். 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

1000 கோடி வரை தாராளமாக வசூலை ஈட்டும் என்றும் சொல்லப்படுகிறது. சென்னை, கோவா, கேரளா, கொடைக்கானல், ராஜாமுந்திரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்திற்கான அறிவிப்பு 2019லேயே வந்துவிட்டது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு

ஆனால் படம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக சூர்யா ரொம்பவே மாஸாக நடித்துள்ளார். படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. சனி, ஞாயிறு விடுமுறை தினம் வருவதால் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அமரன் வசூலை முறியடித்தது

தற்போது கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அமரன் படத்தின் வசூலை முறியடித்துள்ளது. அமரன் படம் முதல் நாளில் 21.65 கோடியை வசூலித்தது.

kanguva

kanguva

உலகளவில் 34 கோடியை வசூலித்தது. கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 22 கோடியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகளவில் 45 முதல் 50 கோடி வரை இருக்கும் என்றும் தெரிகிறது. அந்த வகையில் அமரன் படத்தின் வசூலை தகர்த்துள்ளது கங்குவா.

ஓபனிங் டே வசூல்

கங்குவா முதல் நாளில் உலகளவில் 45 முதல் 50 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழ்நாடு அளவில் 12 முதல் 13 கோடியும், இந்திய அளவில் 26 முதல் 28 கோடியும் வசூலித்துள்ளது. இந்தியில் மட்டும் 2 முதல் 3 கோடி என்று தெரிகிறது. கங்குவா படம் அட்வான்ஸ் விற்பனையில் உலகம் முழுவதும் 18 கோடியும், தமிழக அளவில் 6.1 கோடியும் வசூலித்துள்ளது.

Also read: சொதப்பிய கங்குவா?!… அப்ப அமரன் 300 கோடி கன்ஃபார்ம்!… எஸ்கே காட்டுல மழை தான் போங்க!…

அந்த வகையில் ஓபனிங் டே வசூலில் கங்குவா 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன் கோட், வேட்டையன், இந்தியன் 2 ஆகிய படங்கள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது. அமரன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top