அங்க இங்க கைய வச்சு… கடைசியில் கமல்ஹாசனின் அடி மடியில் கை வைத்த அமரன் திரைப்படம்!..

by Akhilan |   ( Updated:2024-12-01 02:06:56  )
kamal_sivakarthikeyan
X

kamal_sivakarthikeyan

Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ஒரு மாதத்தை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது கமல்ஹாசனின் சாதனை ஒன்றை முறியடித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை இப்படம் உருவாக்கி இருந்தது.

இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு அஜீத் ஆதரவு… சிம்பாலிக்கா சொல்லி தெறிக்க விட்டுட்டாரே…!

அவரின் மனைவி இந்து ரபேக்கா வர்க்கீஸாக சாய்பல்லவி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பெரிய அளவில் பலமாக அமைந்தார். அதுபோல இப்படத்தின் இசையமைப்பை ஜிவி பிரகாஷ் செய்திருந்தார். அதுவும் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பிளஸ் ஆக அமைந்தது. தொடர்ச்சியாக படம் முதல் ஷோவில் இருந்து தற்போது வரை பாசிட்டிவ் விமர்சனங்களை குறித்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் திரைப்படம் ஒன்று முந்நூறு கோடியை தாண்டி தமிழகத்தில் வெற்றி நடை போட்டு வருவது இதுதான் முதல் முறை. கடந்த 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான படம் இன்று வரை திரையரங்குகளில் நான்கு காட்சிகள் வரை திரையிடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Biggboss Tamil8: தக் லைஃப்னு கடுப்பாக்கும் விஜய் சேதுபதி… இந்த போட்டியாளார் மீது வன்மத்தை கொட்டுறாரே!..

தொடர்ந்து அமரன் திரைப்படத்தின் வசூல் அதிகரித்து வந்தாலும் டிசம்பர் 5ஆம் தேதி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அமரன் வெற்றியால் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக படங்களை தயாரிக்கும் என பேசப்பட்டும் வருகிறது.

Next Story