More
Read more!
Categories: Cinema News latest news

அமரனுக்கு தில்லு அதிகம்தான்! ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்.. தளபதிக்கே செக்கா?

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரிப்பில் உருவாகிக் கொண்டு வரும் திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் என்ற திரைப்படத்தை எடுத்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ராஜ்குமார் பெரியசாமி. இவர் ஏற்கனவே கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கியதால் கமலுடன் நல்ல நட்பு ஏற்பட்டது.

அப்போதே கமலிடம் ராஜ்குமார் பெரியசாமி தான் வைத்திருந்த கதைகளை கமலிடம் சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த அமரன் திரைப்படம். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் ராஜ்கமல் நிறுவனம் மூலமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் அமரன் திரைப்படம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பெரிய மனுஷனா? ‘சிவாஜி’ பட சூட்டிங்கில் ஷங்கரை லெஃப்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இது மறைந்த ராணுவ வீரரான முகுந்த வரதராஜனின் பயோபிக்கை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படமாகும். அதனால் இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார்.இந்தப் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. எஞ்சியுள்ள படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

மே மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் சில பணிகள் இருப்பதினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அமரன் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி என்று அறிவித்த நிலையில் அமரன் திரைப்படம் கொஞ்சம் தள்ளி செப்டம்பர் 27 என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஆசை திரைப்படம் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்லையாம்!… மிஸ் செய்த பிரபலம்…

Published by
Rohini

Recent Posts