Cinema News
Amaran: அமரன் படத்துக்கு எதிராக வெடித்த போராட்டம்… திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு..
Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு திடீர் பிரச்சினை வெடித்துள்ள நிலையில் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் வெளியாகி முதல் நாளிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதும் சூர்யா-தனுஷ்… இதுல இவங்க வேறயா?!… 2025 சுமார் தாறுமாறா இருக்கப்போது!…
தொடர்ச்சியாக தீபாவளி ரேஸில் முந்தி வசூலையும் குவித்து வருகிறது. முதல் முறையாக சிவகார்த்திகேயன் திரைப்படம் மூன்று நாட்களில் 100 கோடி வசூலை தாண்டியது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனாக நடித்திருந்தார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனின் முகுந்த் கேரக்டர் எந்த சாதி குறித்து வெளிப்படையாக காட்டவில்லை. பிராமணர் சமூகத்தை சேர்ந்த அவரை ஏன் குறிப்பிடவில்லை என பல பிரச்சினைகள் இருந்தது. இதற்கு படத்தின் வெற்றி விழாவில் ராஜ்குமார் பெரியசாமி முகுந்த் குடும்பத்தினர் அவரை இந்தியராக காட்ட மட்டுமே விரும்பியதாக தெரிவித்திருப்பார்.
இந்நிலையில் இப்படத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து வெறுப்பு பரப்புவதாக இஸ்லாமிய அமைப்புகள், எஸ்டிபிஐ உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அமரனை தயாரித்த ராஜ்கமல் அலுவலகமும் முன்பும் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமரன் படம் ஓடும் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தது.
இதையும் படிங்க: Mahanathi: சன் டிவியில் கிடைத்த பெத்த வாய்ப்பு!… விஜய் டிவியின் மகாநதி சீரியலை கழட்டிவிட்ட பிரபல நடிகை?!…