அந்த தெலுங்கு படத்தின் காப்பியா கங்குவா?.. சூர்யா படத்தின் கதையையே உளறிய ஓடிடி நிறுவனம்!..

கங்குவா படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய அமேசான் பிரைம் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அந்த படத்தின் கதையை உளறிக் கொட்டி விட்டது சூர்யா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

கங்குவா படத்தின் கதை 1700ம் ஆண்டில் வாழ்ந்த சூர்யா 2023ம் ஆண்டுக்கு 500 ஆண்டுகள் முடிக்க முடியாத மெஷினை முடிக்க பயணித்து வருவது தான் கங்குவா படத்தின் கதை என அமேசான் பிரைம் நிறுவனம் சற்று முன் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: கங்குவா முதல் காந்தாரா 2 வரை!.. இத்தனை படங்கள் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகுது தெரியுமா?..

இதே போன்ற கதையுடன் தான் கடந்த 2022ம் ஆண்டு தெலுங்கில் நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா நடிப்பில் வெளியான பிம்பிசாரா படமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. டைம் டிராவல் கதையாக மாயாஜாலம் நிறைந்த கதையாக அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதே போல 500 ஆண்டுகாலம் காலப் பயணத்தை கங்குவா சூர்யா மேற்கொண்டு வில்லனை பழி வாங்கப் போகிறாரா? என்றும் இந்த படத்திலும் டைம் டிராவல் இருக்குமா? என ரசிகர்கள் ஏகப்பட்ட கதைகளை இப்போதே யூகிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க: நைட்டு ஃபுல்லா வேற படம்!.. பகலில் சின்னக்கவுண்டர்!.. விஜயகாந்த் எனர்ஜியை பார்த்து மிரண்டு போன பிரபலம்…

அமேசான் பிரைமுக்கு கொடுத்த கதைச்சுருக்கத்தை அப்படியே போட்டு விட்டார்களே என சூர்யா ரசிகர்கள் இப்போதே தலையில் அடித்துக் கொள்கின்றனர். கங்குவா படத்தின் திரைக்கதை கை கொடுத்தால் படம் பெரிய வசூலை ஈட்டும் என்றும் இல்லை என்றால் கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா கதை தான் கங்குவா படத்துக்கும் என கலாய்த்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story