Connect with us
vijayaknth

Cinema News

நைட்டு ஃபுல்லா வேற படம்!.. பகலில் சின்னக்கவுண்டர்!.. விஜயகாந்த் எனர்ஜியை பார்த்து மிரண்டு போன பிரபலம்…

விஜயகாந்துக்கு சினிமாவில் நடிப்பது எவ்வளவு ஆர்வமோ அதேபோல் அவருக்கும் எனர்ஜியும் அதிகம் என்பது அவருடன் வேலை பார்த்த பலருக்கும் தெரியும். சினிமாவில் விஜயகாந்தை போல கடுமையாக வேலை செய்தவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து 7 மணி நேரம் பயணித்து இரவு முழுவதும் நடிப்பார். அதன்பின் கிளம்பி சென்னை வந்து வேறு படத்தின் படப்பிடிப்பில் மாலை வரை நடிப்பார். மாலை மீண்டும் காரில் கிளம்பி பயணம் செய்து இரவு முழுவதும் அந்த படத்தில் நடிப்பார். இப்படி ஒரு நாள் இல்லை. பல நாட்கள் அப்படி நடிப்பார்.

இதையும் படிங்க: குறைந்த பட்ஜெட்!.. ஆனா பல கோடி லாபம்!.. விஜயகாந்த் படங்களின் லிஸ்ட் இதோ!..

அதேபோல், சண்டைக் காட்சிகளில் நடிப்பதில் அதிக ஆர்வமுள்ள விஜயகாந்த் மணிக்கணக்கில் தலைகீழாக தொங்கிக்கொண்டு பல மணிநேரம் நடிப்பார். இப்படி பல படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடன் நடிக்கும் வில்லன் நடிகருக்கு ஒரு பிரச்சனை, அவருக்கு உடனே காசு வேண்டும் என்றால் திட்டமிட்ட நாளை விட முன்பே படப்பிடிப்பை நடத்த சொல்லி விடிய விடிய அவருடன் சண்டை போட்டு பணத்தை அவருக்கு வாங்கி கொடுப்பார்.

இது எல்லாம் அவருடன் நடித்த மற்றும் அவரின் படங்களில் வேலை செய்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். விஜயகாந்தை வைத்து சின்னக்கவுண்டர் படத்தை இயக்கிய ஆர்.வி.உதயகுமார் ஒரு மேடையில் பேசியபோது ‘இரவெல்லாம் பரதன் பட படப்பிடிப்பில் கடுமையான சண்டைக்காட்சிகளில் நடிப்பார்’.

இதையும் படிங்க: வெள்ளி விழா கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… இவ்வளவு இருக்கா?

அடுத்தநாள் காலை காரில் பொள்ளாச்சி வந்து தூங்கிகொண்டிருக்கும் எங்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி ‘வாங்க ஷூட்டிங் போவோம்’ என்பார். சின்ன கவுண்டரின் கண் வெள்ளையாக இருக்க வேண்டும். ஆனால் அவரோ இரவு முழுவதும் தூங்காமல் கண்கள் சிவந்து இருப்பார்.

எனவே, அவரை சில மணி நேரம் தூங்க சொல்வேன். அப்படி தூங்கிய பின் கண்கள் வெள்ளையாக இருக்கும். அதன்பின்னரே சின்னக் கவுண்டர் படப்பிடிப்பை நடத்துவேன். அவரைப்போல கடுமையாக உழைக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை’ என அவர் சொல்லி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top