Ameer: இயக்குனர் அமீர் தான் தற்போதைய கோலிவுட் சென்சேஷனாகி இருக்கிறார். அவர் சொல்லும் தகவல்கள் பல ஆச்சரியம் அளிக்கும் விதமாகவே இருக்கிறது. அப்படி அவர் மிஸ் செய்த படம் குறித்த முக்கிய தகவலை சித்ரா லட்சுமணன் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
அமீரின் பேட்டியில் இருந்து, ஒருமுறை கமல் சாரின் மும்பை எக்ஸ்பிரஸும், ரஜினிகாந்தின் ஒரு படமும் திரைக்கு வருகிறது. என்னிடம் செய்தியாளர்கள் கேட்ட எந்த படத்தினை பார்ப்பீங்க எனக் கேட்டனர். நான் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தினை பார்ப்பேன் என்றேன்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு அடுத்து அது அஜித்துக்குதான் கிடைச்சது!.. தளபதிக்கு கூட இல்லையாம்!..
அப்போது தான் கமலுக்கு என்னை பற்றி தெரியவே வந்தது. என்னுடைய காலேஜ் சீனியர் கமலின் அரசியல் கட்சியில் தற்போது பதவியில் இருக்கிறார். அவர் நான் கமலின் தீவிர ரசிகர் என்பதை அவரிடம் சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து நான் நிறைய முறை கமலை மீட் செய்து இருக்கேன்.
அவரை அண்ணன் என்று தான் கூப்பிடுவேன். சமீபத்தில் பார்த்த போது கூட தக் லைஃப் டீசர் பார்த்தீங்களா என்று தான் கேட்டார். 2009ம் ஆண்டு கமலிடம் ஒரு கதை சொன்னேன். அது எங்க இருவருக்குமான பெரிய பேச்சுவார்த்தையாகவே நடந்தது. கடைசியில் என்னை அவர் தயாரிப்பில் படம் இயக்க சொன்னார்.
அது எனக்கு பயத்தினை தந்தது. நான் யோகி படத்தின் க்ளைமேக்ஸையே 30 நாட்கள் எடுத்தேன். கமல் சாரின் தயாரிப்பில் அப்படி செய்ய நேர்ந்தால் இருவருக்குள்ளும் உள்ள நட்பு கெட்டுவிடுமோ என பயம் இருந்ததால் அதை மறுக்கவே செய்தேன். அதன் பின்னர், ரஜினி சாருக்கு படம் செய்வதாக இருந்தது.
இதையும் படிங்க: கமலோட அந்த சீனா? என்னால முடியாது – ஜோதிகாவையும் விடலயா? அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
கமல் சார் தான் அந்த படத்தினை தயாரிக்க இருந்தார். ரஜினி ஹீரோ நான் இயக்குனர். கமல் தயாரித்தால் ஓகேவா என்பதை என்னிடம் ரஜினி சாரே கேட்டார். ஆனால் அதை நான் சரியாக ஃபாலோ செய்யவில்லை. நான் தான் அதில் மைனஸாக இருந்துவிட்டேன்.
சினிமாவில் தொடர்பு ரொம்பவே முக்கியம். நான் அதை தவிறவிட்டு விட்டேன். சினிமாவை எப்படி இயக்குவது என தெரிந்து கொண்ட எனக்கு. சினிமாவில் மற்றவர்களுடன் எப்படி பயணிப்பது என்பதை இப்ப வரை நான் தெரிந்து கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார். தற்போது அமீரின் இந்த பேட்டில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: லோகேஷ்னாலே உள்ளே வந்திருவீங்களே! ‘ரஜினி 171’ல் எதுக்கும் வாய்ப்பில்லாமல் போச்சு – தலைவர்னா சும்மாவா?
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…