Connect with us
rajini

Cinema News

லோகேஷ்னாலே உள்ளே வந்திருவீங்களே! ‘ரஜினி 171’ல் எதுக்கும் வாய்ப்பில்லாமல் போச்சு – தலைவர்னா சும்மாவா?

Rajini 171: ரஜினி தற்போது த.ச.ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. படத்தில் ரஜினியுடன் இணைந்து மஞ்சு வாரியார். பகத் பாசில் , அமிதாப் பச்சன் போன்ற முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு பிறகு ரஜினி அடுத்ததாக லோகேஷுடன் இணைய இருக்கிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் ரஜினியும் அந்தப் படத்திற்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய 170 வது படம் லோகேஷுடன் தான் என ரஜினி நினைத்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு அடுத்து அது அஜித்துக்குதான் கிடைச்சது!.. தளபதிக்கு கூட இல்லையாம்!..

ஆனால் எதிர்பாராதவிதமாக ஞானவேல் இயக்கத்தில் அது மாறியது. அதனால் அடுத்த படத்தை லோகேஷ் இயக்குகிறார். ஆனால் ரஜினி லோகேஷ் இணையும் படம் கண்டிப்பாக அவருடைய யுனிவெர்ஸில் அடங்காது என லோகேஷே அறிவித்துவிட்டார்.

இருந்தாலும் ரசிகர்கள் சும்மா இல்லாமல் முன்னாடி நடித்த படத்தின் நடிகர்கள் ரஜினி படத்தில் கமிட் ஆகி விட்டால் இது கண்டிப்பாக யுனிவெர்ஸ்தான் என இஷ்டத்துக்குக் கதை எழுதிவிடுவார்கள். இதே நிலைதான் லியோ படத்திற்கும் இருந்தது.

இதையும் படிங்க: கமலோட அந்த சீனா? என்னால முடியாது – ஜோதிகாவையும் விடலயா? அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

அதனால் லியோ படத்தில் எதிர்பார்ப்பு அதிகமாகி கடைசியில் விமர்சனத்திற்கு ஆளானது. அந்த நிலைமை ரஜினி படத்திற்கு வந்து விடக் கூடாது என லோகேஷ் கவனமாக இருக்கிறாராம். அதனாலேயே முன்னாடி நடித்த படத்தின் நடிகர்கள் யாரும் ரஜினி படத்தில் நடிக்கக் கூடாது என பார்த்து பார்த்து   நடிகர்களை தேர்ந்தெடுத்து வருகிறாராம்.

ஆனால் நிச்சயமாக ரஜினி 171 படம் லோகேஷின் யுனிவெர்ஸில் அடங்காது என திட்டவட்டமாக தெரிகிறது. இதனால் இந்தப் படத்தில் முற்றிலும் ஃபிரஷான நடிகர்களை பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பு சிவாஜியிடம் சொல்ல முடியாமல் தவித்த பத்மினி… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

google news
Continue Reading

More in Cinema News

To Top