முதுகில் குத்தினாலும் திமிரோட தான் நிற்பேன்… ஞானவேல் ராஜா விஷயத்தில் ஓயாத பஞ்சாயத்து..!

by Akhilan |   ( Updated:2023-11-22 08:11:12  )
முதுகில் குத்தினாலும் திமிரோட தான் நிற்பேன்… ஞானவேல் ராஜா விஷயத்தில் ஓயாத பஞ்சாயத்து..!
X

Gnanavel Raja Ameer: ஜப்பான் பட விழாவுக்கு தன்னை கூப்பிடவில்லை. பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடி வரை நஷ்டம் என அமீர் சொன்ன புகார் சமூக வலைத்தளத்தினை உலுக்கியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஞானவேல் ராஜா ஒரு பேட்டியை கொடுத்து இருந்தார்.

அந்த பேட்டியில் இருந்து, 2016ல் இருந்து அமீர் எங்களை பற்றி மோசமாக தான் பேசி வருகிறார். ஆனால் நாங்கள் எதுவுமே பேசவில்லை. இதற்கு காரணம் சிவகுமார் ஐயா தான். இதையடுத்து சமீபத்தில் கூட அமீர் இப்படி பேசி இருப்பது குறித்து அவரிடம் சொன்னேன்.

இதையும் படிங்க: லீக்கான ‘தளபதி 68’ பட கதை!. போட்றா வெடிய!.. விஜய்க்கு இது வேற லெவலா இருக்குமே!..

அப்போது கூட அவர் நீயும் சினிமாவில் தான் இருக்க போற. அமீரும் சினிமாவில் இருக்கார். அவரை பற்றி தப்பா பேசக்கூடாது. உன் இயக்குனரை நீயே தப்பா பேசுவது சரியில்லை. நல்லவர்கள் என யாரிடம் நிரூபிக்க போகிறீர்கள் எனக் கூறினார்.

மேலும் அமீர் நான் தான் சூர்யா மற்றும் கார்த்தி குடும்பத்திடம் அமீரின் நட்பை கெடுத்தேன் எனக் கூறினார். நந்தா ஷூட்டிங்கிலே சூர்யாவை அமீர் தரக்குறைவாக நடத்தினார். அதனால் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் போனது. அந்த படத்தின் இசை வெளியீட்டில் கூட சூர்யா வரவில்லை.

இதையும் படிங்க: சிவாஜிக்கு மட்டும் தரீங்க… எனக்கும் வேணும்.. எம்.ஜி.ஆரிடம் அடம் பிடித்து வாங்கிய நம்பியார்..!

மேலும் அமீர் பருத்திவீரன் படத்தினை இரண்டே முக்கால் கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காப்பியில் இயக்கி தருவதாக சொல்லி இருந்தார். இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை செலவு செய்தார். திரையில் வராமல் போன பன்றிகளுக்கும் கணக்கு காட்டினார்.

இதையெல்லாம் மீறியும் பருத்திவீரனை ரீ ரிலீஸ் செய்த போது அவரைப் போய் பார்த்தேன். ஆனால் அவர் என்கிட்ட பேசின 8 மணி நேரத்தில் 6 மணி நேரம் எங்களை திட்டிக்கொண்டே இருந்தார் என பல குற்றச்சாட்டுக்களை ஞானவேல் ராஜா வைத்தார். அவரின் வீடியோ வைரலானது.

இதனையடுத்து அமீர், ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நன்றி மறந்து நீ என் முதுகில் குத்தினாலும், மீண்டும் மீண்டும் உன் எதிரே திமிரோடுதான் நிற்பேன். உன்னை போல நடிகர்களின் பின்னால் ஒளிய மாட்டேன் எனக் கூறி இருக்கிறார். இவங்க பஞ்சாயத்து ஓயாது போலயே

Next Story