‘துணிவு’ ல என்ன கதை?.. படப்பிடிப்பில் நடந்த கதையை புட்டு புட்டாக வைத்த அமீர்-பாவ்னி!.. அஜித் இப்படி பட்டவரா?..
ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மீண்டும் விஜய் டிவியில் உள்ள ரியாலிட்டி ஷோவில் காதல் வலையில் விழுந்து அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் அமீர். சின்னத்திரை நடிகை பாவ்னியை உருகி உருகி காதலித்து அவர் அந்த காதலை ஏற்கும் வரை பொறுமையாக காத்திருந்து இப்பொழுது அந்த காதலில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அமீர்.
இந்த காதல் ஜோடிதான் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். எப்படி இந்த படவாய்ப்பு வந்தது? அஜித் அவர்களுக்காக என்னவெல்லாம் பண்ணினார்? என்பதை அவர்கள் கூறும் போது அதையே ஒரு படமாக எடுக்கலாம். அந்த அளவுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. முதல் நாள் சூட்டிங்கே பாங்காங்கில் அந்த போட் சீன் தானாம் அமீர் பாவ்னிக்கு. கரையிலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து நடுக்கடலுக்கு போக வேண்டிய சூழ்நிலை , ஒரு போட்டில் அஜித், மஞ்சுவாரியர், அமீர், பாவ்னி, இவர்கள் தான் இருந்திருக்கின்றனர்.
அப்போது அவர்களிடம் தானாகவே வந்து தன்னை அஜித்குமார் என்று தல அறிமுகம் செய்து அமீரை தன் பக்கத்தில் அமரவைத்துக் கொண்டாராம். ஆரம்பத்தில் இப்படி தான் நெர்வஸாக இருக்கும் போக போக சரியாகிவிடும் என்று கூறிவிட்டு கடைசி வரை ஒரு கம்ஃபர்ட் நிலையில் அவர்களை வைத்துக் கொண்டாராம். மேலும் அவர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள், நான் எப்பொழுதும் இருக்கிறேன் என்று கூறினாராம்.
மேலும் அமீர் பாவ்னி, சிபியை நைட் டின்னருக்கு அவரே தொலைபேசியில் அழைத்து வரசொன்னாராம். ரெஸ்டாரண்டில் அமர்ந்து கிட்டத்தட்ட அமீர் பாவ்னிக்கு 2 மணி நேரம் வாழ்க்கையை எப்படி தொடங்க வேண்டும்? எப்படி சிக்கனமாக செலவு செய்யவேண்டும்? எப்படி கொண்டு போக வேண்டும்? தொண்டுகள் செய்வது பற்றியும் சில ஆலோசனைகளை வழங்கினாராம் அஜித்.
இதையும் படிங்க : “விதி தன்னோட வேலைய காமிச்சிருச்சி”… வடிவேலுவை வம்புக்கு இழுக்கும் பிரபல காமெடி நடிகர்… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!
மேலும் நடுக்கடலில் போட் சீன் முடிந்து யாட்டில் வந்த தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லாம் விரைவாக போய்விட்டார்களாம். அந்த சின்ன போட்டில் அமீர் ஒரு பக்கம் , பாவ்னி ஒரு பக்கம், மஞ்சு ஒரு பக்கம் இருக்க எப்படி கரையை கடப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது சர்ருனு அஜித் ஒரு சுற்று சுற்றி வந்து என்னை ஃபாலோ செய்து வாருங்கள் என்று கூறிவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்.
பாவ்னி டான்ஸ் காட்சிகளில் டேக்குகள் வாங்க அஜித் பாவ்னிக்காகவே அவரும் டான்ஸில் சொதப்புவது மாதிரி சொதப்புவாராம். அதன் மூலம் பாவ்னி தன்னை தயார்படுத்த நேரம் கொடுத்திருக்கிறார் அஜித். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை அஜித்தை பற்றி மிகவும் சுவராஸ்யமாக கூறினார்கள் அமீரும் பாவ்னியும்.