Connect with us
Vadivelu

Cinema News

“விதி தன்னோட வேலைய காமிச்சிருச்சி”… வடிவேலுவை வம்புக்கு இழுக்கும் பிரபல காமெடி நடிகர்… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!

கடந்த டிசம்பர் மாதம் வடிவேலு கதாநாயகனாக நடித்து வெளியான “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. கடந்த சில வருடங்களாக வடிவேலு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு மீதான தடை நீக்கப்பட்டது. அதன் பின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு.

Naai Sekar

Naai Sekar

இதில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் முதலில் வெளிவந்ததால், இத்திரைப்படம் வடிவேலுவுக்கு கம்பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் காமெடியர்களாக இணைந்து நடித்த பல நடிகர்கள் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் நடிக்கவில்லை.

சிவாங்கி, கிங்க்ஸ்லி, இட்ஸ் பிரசாந்த் ஆகியோர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தனர். இவ்வாறு டிரெண்டிங்கிற்கு ஏற்றவாறு வடிவேலு புதுமையாக ஒரு கம்பேக் கொடுக்கவுள்ளார் என பலரும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு பெருந்த ஏமாற்றத்தை தந்தது. படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியாக இல்லை எனவும், திரைக்கதையும் மிக சுமாராகவே இருந்தது எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன.

Muthukaalai and Vadivelu

Muthukaalai and Vadivelu

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரும், வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் கலக்கியவருமான முத்துக்காளை “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” குறித்து ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

வடிவேலுவும் முத்துக்காளையும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் பலவும் மிகப் பிரபலமானவை. குறிப்பாக “செத்து செத்து விளையாடலாம்” என்ற காமெடி காட்சி இன்று வரை ரசிக்கும்படியான காமெடி காட்சியாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த முத்துக்காளை சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்திற்கு கிடைத்த சுமாரான வரவேற்பை குறித்து கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒரே ஒரு பொய்யால் ஹிட் படத்தின் வாய்ப்பை இழந்த சரோஜா தேவி… இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது!!

Naai Sekar Retiruns

Naai Sekar Retiruns

அதற்கு பதிலளித்த அவர் “நாய் சேகர் திரைப்படம் ஓடாததற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்று என்னவென்றால், விதி தன் வேலையை சரியாக செய்தது என்று நான் சொல்வேன்” என கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர் “நாங்கள் எல்லாம் வடிவேலு அண்ணனுடன் நடித்த காலத்தில், அவர் நன்றாக வரவேண்டும், அந்த காமெடி பேசப்பட வேண்டும் என்றுதான் நடித்தோம். ஆனால் இப்போது அவர்களுடன் நடித்தவர்கள் தாங்கள் நன்றாக வரவேண்டும் என்றுதான் நடிக்கிறார்கள்” என அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top