பிரச்னைகள் எல்லாம் ஒதுக்குங்க.. அமீர் நடிப்பில் மாயவலை.. வெளியான டீசர்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

by Akhilan |
பிரச்னைகள் எல்லாம் ஒதுக்குங்க.. அமீர் நடிப்பில் மாயவலை.. வெளியான டீசர்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!
X

Ameer: கோலிவுட்டே பல நாட்களாக அமீரின் பிரச்னையால் தான் இயங்கி கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு பருத்திவீரனில் அவர் பட்ட கஷ்டங்களை பல இயக்குனர்கள் ஓபனாக சொல்லி வருகின்றனர். ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் சொல்லவும் மறக்கவில்லை.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அமீர். அப்போது அவரின் சேது மற்றும் நந்தா படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இதை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் தான் பருத்திவீரன்.

இதையும் படிங்க: பாலச்சந்தருடன் முதல் சந்திப்பு!.. ரஜினி கேட்ட கேள்வி!.. நடிக்க வாய்ப்பு கிடைச்சது இப்படித்தான்!..

முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யார் இந்த இயக்குனர் என பேசவைத்தது. ஆனால் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய பிரச்னையை கொண்டு வந்தது. கடனை வாங்கி அமீர் முடித்து கொடுத்த படத்துக்கு தயாரிப்பாளரானவர் ஞானவேல்ராஜா.

ஆனால் கொடுக்க வேண்டிய மிச்ச பணத்தினை கொடுக்காமல் கிட்டத்தட்ட 17 வருடமாக அலைகழிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் கார்த்தி25 நிகழ்ச்சிக்கு அமீருக்கு அழைப்பு விடுக்கப்படாமல் போனது சர்ச்சையை உருவாக்கியது. அமீர் என்னை அழைக்கவில்லை என உடைத்தார்.

இதையும் படிங்க: ரஜினி மாறு வேஷத்தில் போய் பார்த்த சூர்யா படம்!.. என்ன சொன்னார் தெரியுமா?...

ஞானவேல்ராஜா தேவையே இல்லாமல் பேட்டி கொடுத்து அதில் மோசமாக பேச பிரபல இயக்குனர்கள் அமீருக்கு சப்போர்ட்டுக்கு வந்தனர். இந்த விவகாரம் இன்னமுமே கொளுந்திவிட்டு எரிந்து வருகிறது. இந்நிலையில் அமீரின் நடிப்பில் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து வந்த மாயவலை டீசர் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் காதல், நட்புடன் அமைந்த ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக ரசிகர்களை மகிழ்விக்கும் எனவும் கூறப்படுகிறது. அமீருக்கு ஆதரவாக இருந்த சேரன், கரு. பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி, சினேகன் ஆகியோர் இந்த டீசரை ரிலீஸ் செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாயவலை டீசரைக் காண: https://www.youtube.com/watch?v=WOhL3lNldPc

Next Story