Connect with us
rajini

Cinema History

பாலச்சந்தருடன் முதல் சந்திப்பு!.. ரஜினி கேட்ட கேள்வி!.. நடிக்க வாய்ப்பு கிடைச்சது இப்படித்தான்!..

ரஜினியை அறிமுகம் செய்தது பாலச்சந்தர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ரஜினியை அவர் எங்கே சந்தித்தார்?.. ரஜினியை தனது படத்தில் நடிக்க வேண்டும் என அவருக்கு ஏன் தோன்றியது?.. வாய்ப்பை பெற ரஜினி என்ன செய்தார் என்பது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

கர்நாடகாவில் இருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த ரஜினி திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுவந்தார். அப்போது அவரின் பெயர் சிவாஜி ராவ். தமிழ்நாட்டுக்கு வந்தவுடனே பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தை பலமுறை பார்த்து பாலச்சந்தரின் ரசிகராக மாறினார். அதோடு, அவள் ஒரு தொடர்கதை படத்தையும் பார்த்திருந்தார். நடிப்பு பயிற்சி 2 வருடம் முடிந்ததும் மாணவர்களிடம் உரையாட 2 இயக்குனர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் பாலச்சந்தர். அப்போது அவர் அபூர்வ ராகங்கள் பட வேலையில் இருந்தார்.

இதையும் படிங்க: வாண்டடா போய் நடித்த ரஜினி!… 25 நாட்களில் உருவான மெகா ஹிட் திரைப்படம்..

பாலச்சந்தரை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் இருந்த சிவாஜி ராவுக்கு அவரே கல்லூரிக்கு வரப்போகிறார் என்றதும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அங்கு வந்த பாலச்சந்திரிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர். சிவாஜி ராவின் முறை வந்ததும் ‘ஒரு நடிகரிடம் நடிப்பை தாண்டி நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?’ என கேட்டார். ஒரு நடிகர் வெளியே நடிக்க கூடாது என சுருக்கமாக பதில் சொன்னார் பாலச்சந்தர்.

balachandar

உரையாடல் முடிந்ததும் சிவாஜி ராவுக்கு கை கொடுத்தார் பாலச்சந்தர். தன்னை தூக்கிவிடத்தான் அவர் கை நீட்டுகிறார் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை. ‘தமிழ் தெரியுமா?’ என பாலச்சந்தர் கேட்க, சிவாஜி ராஜோ ‘கொஞ்சம் தெரியும்’ என சொல்ல, ‘நீ பேசும்போது எனக்கு அது தெரிகிறது’ என சிரித்தார் பாலச்சந்தர். அபூர்வ ராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக ஒரு புதுமுகத்தை நடிக்கவைக்க முடிவெடுத்த பாலச்சந்தருக்கு சிவாஜி ராவின் முகம் நினைவுக்கு வந்தது.

இதையும் படிங்க: ரஜினியின் கோபத்தால் சினிமாவில் நடிக்கவந்த விஜயகாந்த்!. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!..

தயாரிப்பு நிர்வாகியை அழைத்து ‘அன்றைக்கு கல்லூரியில் கன்னடம் பேசும் ஒரு பையனை பார்த்தோமோ, அவன் என்கிருந்தாலும் அழைத்து வா’ என சொல்கிறார். 2 நாட்களில் பாலச்சந்தர் முன்பு சிவாஜிராவ் நிற்கிறார். ’இந்த படத்தில் உனக்கு ஒரு சிறிய வேடம். இதில் நீ நடி. தொடர்ந்து 3 படங்களில் உன்னை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறேன். அடுத்த படங்களில் உனக்கு அதிக காட்சிகளில் வரும் வேடத்தை கொடுக்கிறேன்’ என சொல்ல சிவாஜி ராவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

rajini

அதன்பின் ‘உனக்கு எந்த மாதிரியா வேடங்களில் நடிக்க ஆசை?’ என பாலச்சந்தர் கேட்க ‘வில்லனாக நடிக்க ஆசை’ என சிவாஜி ராவ் சொல்ல ‘அது என்ன வில்லன்?. நல்ல வேடத்தில் நடிக்க வேண்டும் என சொல்ல மாட்டாயா?’ என அவர் கேட்க, சிவாஜி ராவோ ‘வில்லன் என்றால் நன்றாக நடித்துவிடுவேன்’ என சிரித்துக்கொண்டே சொன்னாராம்.

சிவாஜி ராவை பார்த்ததுமே அவருக்கு என்ன மாதிரியான வேடங்களை கொடுக்க வேண்டும் என பாலச்சந்தர் முடிவு செய்துவிட்டார். இது புரியாத சிவாஜி ராவ் ‘நான் நடித்து காட்டட்டுமா?’ என கேட்க, ‘சரி நடி’ என அவரும் சொல்ல சிவாஜி ராவோ ‘ஏன் கேட்கிறாய் வட்டி.. எதற்கு கேட்கிறாய் வட்டி?’ என வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி வசனத்தை பேசி நடித்து காட்ட ‘போதும். போதும்.. ஏன் வேறு ஒரு நடிகர் போல நடிக்கிறாய்… உனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி கொள். அதுதான் நிலைத்து நிற்கும்’ என பாலச்சந்தர் சொல்ல, அவர் சொன்னது சிவாஜி ராவுக்கு வேத வாக்காக மாறியது. அந்த சிவாஜி ராவுக்குதான் ரஜினி என பெயர் வைத்து அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வைத்தார் பாலச்சந்தர்.

அதன்பின் அவர் சொன்னவாறே தனது படங்களில் ரஜினியை தொடர்ந்து நடிக்க வைத்து அவரை முழு ஹீரோவாக பாலச்சந்திர் மாற்றியது குறிப்பிடத்தக்க்து.

google news
Continue Reading

More in Cinema History

To Top