அமீர் வாயை அடைக்கணும்… ஆதரவு தரும் பிரபலங்களிடம் நடக்கும் பேரம்.. அதிர்ச்சி தந்த விமர்சகர்..!

Ameer: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டியால் பருத்திவீரன் பிரச்னை பொதுவெளியில் வெடித்தது. இதை தொடர்ந்து அமீருக்கு ஆதரவு அதிகமாகி கொண்டு இருக்கும் நிலையில், தற்போது பேர பேச்சுக்கள் தொடங்கி இருப்பதாகவும் பிரபல விமர்சகர் பிஸ்மி சொல்லி இருப்பது அதிர்ச்சி அலைகள் உருவாக்கி இருக்கிறது.
பருத்திவீரன் படத்தினை முடிக்க அமீர் நிறைய கடனை வாங்கி செய்தார். அதனை திருப்பி தரமாலே ஞானவேல் ராஜா அப்படத்தினை வாங்கி கொண்டார். இதனால் அமீர் கோர்ட் படியேறி இருந்தார். 17 ஆண்டுகளை கடந்தும் இன்னும் அதற்கு தீர்வு வந்தப்பாடு இல்லை.
இதையும் வாசிங்க:நடிகர் திலகத்தையே டென்ஷனாக்கிய வைகைப்புயல்… படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..
இந்நிலையில் கார்த்தி25க்கு அமீர் இல்லாமல் போக அதில் தொடங்கி பேச்சு தற்போது சூர்யா, கார்த்தி, சிவக்குமார் புகழை காவு வாங்கி இருக்கிறது. தொடர்ச்சியாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை பல இயக்குனர்கள், பிரபலங்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதனால் முதலில் பரவி வரும் நெகட்டிவ் இமேஜை சரி செய்ய அவர்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாக பிஸ்மி தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதிலிருந்து, ரசிகர்கள் கருத்தை அவங்க எதுவும் சொல்ல முடியாது. தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாக இருந்தால் அவர்களிடம் அமீரை குறித்து தப்பாக சொல்கின்றனர்.
இதையும் வாசிங்க: பாக்கியராஜை சும்மாவே விடக்கூடாது!… கொந்தளிக்கும் பிரபல இயக்குனர்… காரணம் தெரியுமா?..
அவர் படத்தின் ரைட்ஸ் விற்க உதவி செய்கிறோம். அமீருக்கு எதிராக பேச சொல்லி இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் சசிக்குமார், வெற்றிமாறனையும் சந்தித்து பேசி இருக்கின்றனர். என்கிட்ட தனஜெயன் பேசினார். ஞானவேல் ராஜா என்னை சந்திக்கணும்னு கேட்டார். நான் முடியாது என்றேன்.
அடுத்த நாளும் இன்னொருவர் மூலம் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு உங்களை சந்திக்கணும் என்கின்றனர். அமீர் குறித்து திடுக்கிடும் தகவலை தருவதாக சொல்கிறார்கள். அதை வைத்து நீங்க ஒரு வீடியோ போட வேண்டும் என்கின்றனர் எனக் கூறினார். நான் முடியாது எனக் கூறிவிட்டேன் எனவும் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.
இதையும் வாசிங்க: கண்ணதாசன் ஏதோ உளரார்னு நினைச்சேன்!.. ஆனா அது சாகாவரம் பெற்ற பாடல்!.. உருகும் பிரபலம்!…