ஒரு ஹீரோனு கூட பாக்கல! அமீர் சூர்யாவை நடத்திய விதம் - பதிலுக்கு சிவக்குமார் என்ன செய்தார் தெரியுமா?
Director Ameer: தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக நடிகராக அறியப்பட்டவர் அமீர். நடிகர் கார்த்தியை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் அமீர். பருத்திவீரன் திரைப்படத்தின்மூலம் அறிமுகம் செய்து இன்று கார்த்தியை அனைவரும் கொண்டாடி வருகிறோம்.
ஆனால் கார்த்தி 25 விழாவில் முதல் இயக்குனரான அமீர் அழைக்கப்படவில்லையே என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்தது. அதற்கு பின்னனியில் ஏகப்பட்ட காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் கார்த்தி குடும்பத்திற்கும் அமீருக்கும் இடையே இருக்கும் அந்த உறவை பற்றி பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: ரத்னகுமார் பேச்ச கேட்டு நாசமா போச்சு! ரஜினி171ல் லோகேஷ் 2.0வைப் பாக்க போறீங்க!..
மௌனம் பேசியதே திரைப்படம் சூர்யாவின் நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அமீர் சூர்யாவை நடத்திய விதம் சூர்யாவிற்கு பிடிக்கவில்லையாம். ஒரு ஹீரோ என்று கூட பார்க்காமல் மிகவும் அலட்சியப்படுத்தியிருக்கிறார்.
அதனாலேயே அமீருடன் படம் ரிலீஸ் ஆகும்வரை சூர்யா பேசாமல்தான் இருந்தாராம். அந்தப் படத்திற்கு பிறகு எந்த வாய்ப்பும் இல்லாமல் அமீர் இருக்க தன் சொந்த காசை போட்டு ராம் என்ற படத்தை எடுத்திருக்கிறார். அதற்கான பூஜையில் சிவக்குமாரும் கலந்து கொண்டாராம். கூடவே ஞானவேல் ராஜாவையும் அழைத்து சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: நண்பனுக்காக காதலியை அனுப்பி வைத்த காதல் மன்னன்!.. ஊஞ்சலாடிய சந்திரபாபுவின் இளமை!..
சூர்யாவிற்கும் அமீருக்கும் இடையே என்னதான் பிரச்சினை இருந்தாலும் இன்று சொந்தப் படம் எடுக்க போறான். அவனுக்கு துணையாக நாம் தான் இருக்கனும் என சிவக்குமார் அமீருக்காக சென்றாராம். இருந்தாலும் அந்தப் படத்தின் மூலம் 78 லட்சம் கடனாளியாக மாறினாராம் அமீர்.
அந்த கடனை அடைத்தது ஞானவேல்ராஜாதானாம். அதனாலேயேதான் பருத்திவீரன் படத்தை இயக்க முன்வந்திருக்கிறார் அமீர். ஆனால் நாங்கள் என்னமோ கார்த்தியை நீங்கள் தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கெஞ்சியதாகவும் கார்த்திக்கிற்காக பருத்திவீரன் படம் அமீர் எடுத்ததாகவும் அமீர் பல மேடைகளில் பேசி வருவதாக ஞானவேல் ராஜா கூறினார்.
இதையும் படிங்க: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த அநியாயம்! பிக்பாஸில் அறிவுரை சொல்லும் கமல் இப்போ எங்க?
உண்மையிலேயே அவர் என்னிடம் பெற்ற கடனுக்காகத்தான் பருத்திவீரன் படத்தை எடுத்தார் என ஞானவேல் ராஜா கூறினார்.