குக் வித் கோமாளி பிரபலத்தை காதலிக்கும் அம்மு அபிராமி… அதானே பாத்தோம்…

Cook With Comali: தமிழ் ரியாலிட்டி ஷோவில் புதுமுயற்சியாக வெளியானது குக் வித் கோமாளி. இது நான்கு சீசனை தாண்டி தற்போது ஐந்தாவது சீசனில் காலை எழுத்து வைத்து இருக்கிறது. ஆனால் தற்போது வேறொரு சுவாரஸ்ய சம்பவமும் வெளியாகி இருக்கிறதாம்.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருபவர் அம்மு அபிராமி. இதில் அவர் நடித்த ராட்சசன், தம்பி, அசுரன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் அதையெல்லாம் விட குக் வித் கோமாளி சீசன் 3ல் இவருக்கு கிடைத்த புகழ் ரசிகர்களிடம் தனி அடையாளத்தினை பெற்று தந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்துக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த ராவுத்தர்!… சிகிச்சையே வேண்டாமென கோமோவிற்கு சென்ற சோகம்!

தற்போது நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு அம்மு அபிராமிக்கு கிடைத்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் அபிராமி காதலில் சிக்கி இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது குக் வித் கோமாளி இயக்குனர் பார்த்திவ் மணியை தான் காதலிக்கிறாராம்.

ஆனால் இருவரும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்காத நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் லீக்காகி இருக்கிறது. மேலும் சில வீடியோக்களில் பார்த்திவ் அம்முவுடன் இருப்பதையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பார்த்திவ் மணி விலகி இருக்கும் நிலையில் அவரின் புதிய நிகழ்ச்சி சன் டிவியில் வெளியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தக்க சமயத்தில் விஜே பிரியங்கா செய்த உதவி!.. பாலா வாழ்க்கையை மாற்றிய அந்த தருணம்…

 

Related Articles

Next Story