More
Categories: Cinema News latest news

பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு!.. லவ்வருடன் எடுத்த வீடியோவை வெளியிட்ட அம்மு அபிராமி!..

ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. தொடர்ந்து பல படங்களில் இளம் வயது பருவ நடிகையாக நடித்து வந்த அவர் சமீப காலமாக ஹீரோயினாகவும் மாறியுள்ளார்.

விஜய் நடித்த பைரவா படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அம்மு அபிராமி. என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், துப்பாக்கி முனை, அசுரன், தம்பி, நவரசா, தண்டட்டி, பாபா பிளாக் ஷீப், கண்ணகி, ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சுகன்யா செஞ்சதை யாரும் செய்ய முடியாது! சைடு ஆக்டர் கூட இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..

குக்கு வித் கோமாளி சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட அம்மு அபிராமி அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப்பாக தேர்வானார். கடைசிவரை அம்மு அபிராமி அந்த நிகழ்ச்சியின் நீடித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை இயக்கிய பார்த்தி மணி என்பவருடன் அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நெருக்கம் ரகசிய காதலாக மலர்ந்து வந்த நிலையில், தற்போது அதனை வெளிப்படையாக அம்மு அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

பார்த்திவ் மணியின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மு அபிராமி வெளியிட்ட வாழ்த்து வீடியோவில், ஹாப்பி பர்த்டே டியர் என்றும் பிறந்ததற்கு நன்றி. வாழ்வில் வந்ததற்கு நன்றி! என்று ஹார்ட்டின் எமோஜியை போட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதன்மூலம் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு தான் கமிட் ஆகிவிட்டேன் என்பதையும் அம்மு அபிராமி உணர்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் பண்ண மட்டும் தான் தமிழ்நாடு!.. பொண்ணோட கல்யாணத்த ஃபாரீன்ல நடத்தும் சரத்குமார்?..

ஹாட்ஸ்பாட் படத்தில் சாண்டி மாஸ்டருக்கு ஜோடியாக அம்மு அபிராமி போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கண்ணகி திரைப்படத்திலும் அவருக்கு போல்டான கதாபாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் அம்மு அபிராமி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதற்குள் அவர் காதலில் விழுந்ததை பார்த்த ரசிகர்கள் இதயம் நொறுங்கிப் போயுள்ளனர். சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு போகலனா என்ன?!.. பிரேம்ஜிக்கு பெரியப்பா இளையராஜா செய்த சிறப்பான சம்பவம்!…

Published by
Saranya M

Recent Posts