30 வருடம் படுக்கை வாழ்க்கை!.. தீராத கனவுகள்!.. என் உயிர் தோழன் பாபு மரணம்..

என் உயிர் தோழன் படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் பாபு. 1990ம் வருடம் வெளிவந்த இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘குயிலு குப்பம் குயிலு குப்பம் கோபுரம் ஆனதென்ன’ பாடல் அப்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஏ ராசாத்தி..பூச்சூட்டி வா வா வா’ பாடலும் சூப்பர் ஹிட் அடித்தது. இயக்குனர் விக்ரமின் இயக்கத்தில் பெரும்புள்ளி என்கிற படத்திலும் நடித்திருந்தார். தாயம்மா, பொண்ணுக்கு சேதி […]

Update: 2023-09-19 01:21 GMT

என் உயிர் தோழன் படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் பாபு. 1990ம் வருடம் வெளிவந்த இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘குயிலு குப்பம் குயிலு குப்பம் கோபுரம் ஆனதென்ன’ பாடல் அப்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஏ ராசாத்தி..பூச்சூட்டி வா வா வா’ பாடலும் சூப்பர் ஹிட் அடித்தது.

இயக்குனர் விக்ரமின் இயக்கத்தில் பெரும்புள்ளி என்கிற படத்திலும் நடித்திருந்தார். தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தில் நடித்தபோது ஒரு சண்டை காட்சியில் மாடியிலிருந்து கீழே குதிக்க வேண்டும். அதில் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என மேலிருந்து குதித்தார். வேண்டாம் என படப்பிடிப்பு குழுவினர் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

அப்படி குதித்ததில் தவறி விழுந்து அவரின் முதுகெலும்பு உடைந்து போனது. அதன்பின் 30 வருடங்களாக படுக்கையில் கிடக்கிறார். அவருக்கு அவரின் தாயார் பணிவிடைகளை செய்து வந்தார். அவருக்கும் 80 வயது ஆகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா நேரில் போய் அவரை பார்த்துவிட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக அவரின் உடல்நிலை மோசமடைந்தது.

ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல் நிலை நேற்று மோசமடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது அவர் மரணமடைந்துள்ளார்.

இதையும் படிங்க: சுட்ட வடைக்கு மவுசு அதிகம்னு தெரிஞ்சு போச்சு! சும்மா இருப்பாரா? அட்லீயின் அடுத்த அதிரடியான முடிவு

Tags:    

Similar News