
Cinema News
சுட்ட வடைக்கு மவுசு அதிகம்னு தெரிஞ்சு போச்சு! சும்மா இருப்பாரா? அட்லீயின் அடுத்த அதிரடியான முடிவு
Atlee Jawan: தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து விஜயை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார். மொத்தமாக நான்கு படங்களை மட்டுமே கொடுத்த அட்லீ திடீரென பாலிவுட் பக்கம் சென்றார்.
அங்கு பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற ஒரு கேங்ஸ்டர் திரைப்படத்தை எடுத்தார். சமீபத்தில் தான் இந்தப் படம் வெளியானது. வெளியான நாளிலிருந்தே கோடி கோடியாய் வசூலை அள்ளி வருகிறது.
இதையும் படிங்க: கலாநிதி மாறன் கொடுத்த கவரில் இருந்தது இத்தனை கோடியா!.. அடேங்கப்பா தலையே சுத்துது!…
கிட்டத்தட்ட 500 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்று வரும் ஜவான் திரைப்படத்தால் அட்லீயின் மார்கெட்டும் அதிகரித்துள்ளது. வழக்கம் போல் அட்லீயை பற்றி என்னதான் கழுவி கழுவி ஊற்றினாலும் படத்தை வேறொரு பரிணாமத்துக்கு கொண்டு சென்று விட்டார் அட்லீ.
இதனால் அட்லீயின் சம்பளமும் பல மடங்கு ஏறியிருக்கிறது. மறுபடியும் அட்லீயுடன் இணைந்து படம் பண்ணவேண்டும் என்ற ஐடியாவிலும் ஷாரூக்கான் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் ஜவான் படத்தை ஆஸ்கார் வரை கொண்டு செல்ல அட்லீ விருப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறாராம்.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனி வீட்டில் ஏற்கனவே நடந்த தற்கொலை சம்பவம்! – இதென்னய்யா பாவம் மனுஷன்!
ஒரு சர்வதேச தரத்திற்கு நிகராக எப்படி படத்தை எடுக்க வேண்டும் என்பதை இந்த ஜவான் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றும் சர்வதேச விழாவில் ஜவான் படத்தை கொண்டு செல்ல ஆசைப்படுவதாகவும் அட்லீ கூறியிருக்கிறார்.
மேலும் ஜவான் படத்தை ஆஸ்கார் வரை கொண்டு செல்வதற்கு ஷாரூக்கானிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியிருக்கிறார் அட்லீ. தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதை எல்லாம் தலைக்கு ஏற்றினால் நம் பாதையில் நடக்க முடியுமா? என்பதற்கேற்ப அட்லீ தொடர்ந்து அவர் வழியில் பயணம் செய்து கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: உன் குடும்பத்தை நான் பாத்துக்குறேன்… நீ போ… ரஜினிகாந்தை தாங்கிய நண்பர்… செமல!