நாகேஷ் சொன்ன ஒரு வார்த்தை! அதோட அர்த்தம் புரிய 6 வருஷம் ஆச்சு.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

Actor Nagesh: தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர்கள் ஏராளமான பேர். அதில் மிகவும் தனித்துவமான நடிகர் நாகேஷ். சினிமாவிற்கு வருவதற்கு முன் நாகேஷ் ஒரு ரயில் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சினிமா மீது கொண்டுள்ள மோகம் காரணமாக தனது அரசு வேலையை ராஜினாமா செய்து வந்தவர் நாகேஷ். நடிப்பில் ஆர்வம் கொண்ட நாகேஷ் அமச்சூர் நாடகங்களில் நடித்த வந்தார். 1959 ஆம் ஆண்டில் தாமரைக் குளம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். […]

By :  Rohini
Update: 2024-06-14 03:40 GMT

nagesh

Actor Nagesh: தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர்கள் ஏராளமான பேர். அதில் மிகவும் தனித்துவமான நடிகர் நாகேஷ். சினிமாவிற்கு வருவதற்கு முன் நாகேஷ் ஒரு ரயில் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சினிமா மீது கொண்டுள்ள மோகம் காரணமாக தனது அரசு வேலையை ராஜினாமா செய்து வந்தவர் நாகேஷ். நடிப்பில் ஆர்வம் கொண்ட நாகேஷ் அமச்சூர் நாடகங்களில் நடித்த வந்தார்.

1959 ஆம் ஆண்டில் தாமரைக் குளம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நாகேஷுக்கு ஒரு பெரிய அந்தஸ்தை கொடுத்தவர் கே பாலச்சந்தர். சர்வர் சுந்தரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். அதன் பிறகு காதலிக்க நேரமில்லை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நாகேஷின் தனித்துவம் தெரிய ஆரம்பித்தது .

இதையும் படிங்க: ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ன்னு சிவாஜியோட ஜோடி போட்ட கதாநாயகிகள்… யார் யார்னு தெரியுமா?

அவருடைய சினிமா கெரியரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் என்றால் திருவிளையாடல் படத்தில் தருமி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது தான் .அதேபோல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக அமைந்தது தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றி தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தினார் நாகேஷ்.

அதன் பிறகு ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற அடுத்த அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்களுடனும் தனது நடிப்பை துவங்கினார். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நாகேஷ் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் தான் அவருடைய கடைசி பயணம் முடிந்தது. இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும் விஜய்யின் நண்பருமான சாப்ளி பாபு நாகேஷை பற்றி ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார் .

இதையும் படிங்க: அப்படியா எழுதினார் வைரமுத்து? நாள் முழுவதும் காத்துக் கிடந்த பாரதிராஜா

ஒரு சமயம் சாப்ளி பாபு நாகேஷை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றாராம். ஏனெனில் நாகேஷுக்கும் தாராபுரம் தான் சொந்த ஊர். சாப்ளி பாபுவுக்கும் தாராபுரம் தான் சொந்த ஊர். அதனால் ஒரே ஊர் காரர் என்றால் கண்டிப்பாக சினிமாவில் நமக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நாகேஷை பார்ப்பதற்கு சாப்ளி பாபு சென்று இருக்கிறார்.

அங்கு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தாராம் நாகேஷ். அப்போது சாப்ளி பாபு நேராக நாகேஷ் வீட்டிற்குள் சென்றதும் நாகேஷை பார்த்து ‘நீங்க கே பாலச்சந்தருக்கு நெருங்கியவர் தானே. நம்ம ஊரு காரன் இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுங்க’ என முட்டாள் தனமாக தனது பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.

இதையும் படிங்க: அது சும்மா டிரெய்லரு! மெயின் பிக்சர் இனிமேதான் இருக்கு.. ‘குணா’வை கொண்டாடுவோமா?

இதை கேட்டதும் நாகேஷ் சாப்ளி பாபுவை மேலிருந்து கீழாக பார்த்தவாறு ‘போயிட்டு என்ன மாதிரி வா’ என சொல்லி உள்ளே போய்விட்டாராம் நாகேஷ். உடனே நாகேஷ் மீது கோபம் கொண்ட சாப்ளிபாபு ‘ஒரே ஊர்காரர் என்று நினைத்தால் இப்படி பேசிட்டு போயிட்டாரே’ என நாகேஷ் மீது கோபத்தை வெளிப்படுத்தியவாறு வெளியே வந்து விட்டாராம் .

chapli

ஆனால் அவர் சொன்ன அந்த வார்த்தை கிட்டத்தட்ட ஆறு வருடம் கழித்துதான் சாப்ளி பாபுவுக்கு தெரிந்திருக்கிறது. போயிட்டு என்ன மாதிரி வா இதற்கு பின்னணியில் உள்ள அர்த்தம் எடுத்ததுமே படங்களில் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஏகப்பட்ட அவமானங்களை கடந்து அதன் பிறகு தான் நமக்கான ஒரு அந்தஸ்தை பெற முடியும். இப்படித்தான் நாகேஷ் வந்திருக்கிறார். இதைத்தான் அவர் சூசகமாக சொல்லி இருக்கிறார் என்பது அதன் பிறகு தான் சாப்ளி பாபுவுக்கு தெரிந்ததாம்.

Tags:    

Similar News