தக் லைப் படத்தில் காலியான 2வது விக்கெட்!... அவருக்கு பதிலா நடிக்கபோவது அந்த நடிகராம்!..

மணிரத்தினத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். இது தமிழ் சினிமாவில் ஒரு கிளாசிக் படமாக வெளிவந்தது. இப்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக நாயகன் இருக்கிறது. இந்த படத்திற்கு பின் மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்து படம் செய்யவில்லை. இப்போது பொன்னியின் செல்வன் மூலம் மணிரத்தினமும், விக்ரம் படம் மூலம் கமல்ஹாசனும் வெற்றியை கொடுத்திருப்பதால் அவர்கள் இருவரும் இணையும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இருவரும் இணைந்து தக் லைப் என்கிற படத்தை […]

Update: 2024-03-27 07:37 GMT

மணிரத்தினத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். இது தமிழ் சினிமாவில் ஒரு கிளாசிக் படமாக வெளிவந்தது. இப்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக நாயகன் இருக்கிறது. இந்த படத்திற்கு பின் மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்து படம் செய்யவில்லை.

இப்போது பொன்னியின் செல்வன் மூலம் மணிரத்தினமும், விக்ரம் படம் மூலம் கமல்ஹாசனும் வெற்றியை கொடுத்திருப்பதால் அவர்கள் இருவரும் இணையும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இருவரும் இணைந்து தக் லைப் என்கிற படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இதையும் படிங்க: போயஸ் கார்டனில் வசிக்கும் திரை பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டா பெருசா போகுதே!…

இந்த படம் 2 கால கட்டத்தில் நடிக்கவிருக்கிறது. கமல்ஹாசன் 3 கெட்டப்பில் நடிக்க விருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இந்த படம் துவங்கப்படும்போது இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

துல்கர் சல்மான் ஏற்கனவே மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல், ஜெயம்ரவியும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். அதோடு, மணிரத்தினம் பெரிய இயக்குனர், அவர் மீது இருவருமே பெரிய மதிப்பு வைத்திருப்பதால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க: ஷிவானிக்கு ஒரு விசில் போடு!.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிளுகிளுப்பு காட்டுறாரே!..

ஆனால், படப்பிடிப்பு சொன்ன தேதியில் நடக்கவில்லை. இதனால் முதலில் துல்கர் சல்மான் இப்படத்திலிருந்து விலகினார். எனவே, அவருக்கு பதில் சிம்புவிடம் பேசி சம்மதம் வாங்கினார்கள். இந்நிலையில், இப்போது ஜெயம் ரவியும் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். ஏனெனில் அவரின் கால்ஷூட்டுக்களை 2 முறை படக்குழு வீணடித்துவிட்டதாம். அவரின் கையில் நிறைய படங்கள் இருக்கிறது.

எனவே ‘சாரி சார்’ என சொல்லிவிட்டு அவர் விலகிவிட்டார். இப்போது அவருக்கு பதில் மலையாள நடிகர் நிவின் பாலியை நடிக்க வைக்கலாமா என மணி சார் யோசித்து வருகிறாராம்.

Tags:    

Similar News