நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டா அங்க போயும் பிரச்சனையா?!. அடங்காத மாரிமுத்து!..
ஏற்கனவே பரியேறும் பெருமாள், இரும்புத்திரை, எமன், சங்கத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மாரிமுத்து. இவர் கண்ணும் கண்ணும், புலிவால் என்ற இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார். இவர் திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் இருந்தபோது கிடைத்த புகழை விட, எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடித்து அதிக புகழ் பெற்றார். சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.
இவர் சீரியலில் மட்டுமல்ல, நிஜத்தில் அப்படி கட் அண்ட் ரைட்டாக கராராக பேசக்கூடியவர் தான். அவர் பேட்டிகளிலும் கூட அப்படி தான் பேசியிருப்பார். இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி சில பிரச்சனைகளால், திடீரென நிறுத்தப்பட்டு, பின்னர் 3 மாதம் கழித்து தற்போது வேறு ஒரு தொகுப்பாளரை வைத்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடிலேயே பிரச்சனையை ஏற்படுத்திவிட்டார் மாரிமுத்து. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், எதிர் தரப்பில் இருந்த ஜோதிடர்களை பார்த்து அவரது ஸ்டைலில் ‘ஏ இந்த பா, இவர்கள் எல்லாம் ஃபிராடு கும்பல் ஆச்சே, இவர்களை ஏன் இந்த நிகழ்ச்சிக்கு கூட்டி வந்தீர்கள்’ என்று பேசியுள்ளார். இதானல் எதிர் தரப்பில் இருந்த ஜோதிடர்கள் கடுப்பாகியுள்ளனர்.
அதன் பிறகும் கூட நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்ற போது, நான் எல்லாம் கடவுளுக்கே பயப்பட மாட்டேன், நீங்கள் எல்லாம் வெறும் ஜோதிடம் பார்ப்பவர்கள் தான் என்று மீண்டும் கராராக இவர் பேசியதால், எதிர் தரப்பினர் கோபமடைந்து, ’எங்களை கூப்பிட்டு வந்து அசிங்கபடுத்துறீங்களா?’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சண்டை போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் வந்து சமாதானம் செய்துவைத்த பிறகு தான் அங்கு சூழ்நிலை சகஜமானது.
இதையும் படிங்க- மெச்சூரிட்டி வந்துருச்சி..முழுசா திருந்திட்டேன், இனிமே அந்த தப்ப மட்டும் பண்ணவே மாட்டேன்- சிம்பு பட இயக்குநர் ஓபன் டாக்