மெச்சூரிட்டி வந்துருச்சி..முழுசா திருந்திட்டேன், இனிமே அந்த தப்ப மட்டும் பண்ணவே மாட்டேன்- சிம்பு பட இயக்குநர் ஓபன் டாக்

by prabhanjani |
aaa
X

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக விஷால், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

tin movie

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு கதை எழுதிய போது தான் தனக்கு காதலியுடன் ப்ரேக் அப் ஆனது. அந்த மனநிலையில், விரக்தியில் இருந்த போது அப்படி கதை எழுதிவிட்டேன். அப்போது எனக்கு 23 வயது தான். அதனால் மெச்சூரிட்டி இல்லை. இப்போது முற்றிலும் திருந்திவிட்டேன். அது போன்ற படங்களை எடுத்ததற்காக பலரும் என்னை திட்டினார்கள்.

aaa movie

படம் நன்றாக ஓடி ஹிட் கொடுத்தது தான். ஆனாலும் இனி அது போன்ற படங்களை எடுக்க மாட்டேன். பெண்களை திட்டவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் எஸ்.ஜே.சூர்யா தான் என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு த்ரிஷா இல்லனா நயன்தாரா போலவே ஒரு கதையை அவரிம் கூறினேன். நீங்கள் பண்ண வேண்டிய படம் இது இல்லை.

வேற மாறி நல்ல படம் பண்ணுங்க, இதையெல்லாம் விட்டுடுங்க. எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுங்க என்று எஸ்.ஜே.சூர்யா அறிவுரை கூறினார். மேலும் மார்க் ஆண்டனி படத்தில் வரும் ‘நா எல்லாத்தையும் மாத்தி, மறந்து, மாறி வந்திருக்கேன்’ என்ற வசனத்தை என் வாழ்க்கைய நினைத்து தான் எழுதினேன்.

adik ravichandran director

த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களை மாற்றி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை மறந்து, மார்க் ஆண்டனியாக மாறி வந்திருக்கிறேன். த்ரிஷா இல்லனா நயன்தாரா பார்ட் 2 வருமா என்று சிலர் கேள்வி கேட்டனர். அதற்கு கண்டிப்பா வராது என்று பதிலளித்துள்ளார். இனி பெண்களை திட்டி படம் எடுக்க மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதையும் படிங்க- இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி?; மரணத்தில் உள்ள மர்மம்!.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்…

Next Story