ஃபுல் பார்ட்டி மஜாவா இருந்த பிரேம்ஜி! திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாரு பாருங்க.. வைரலாகும் வீடியோ

Premji: சமீபத்தில் தான் இசையமைப்பாளரும் நடிகரும் பாடகருமான பிரேம்ஜியின் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அது மட்டுமல்லாமல் இவர்களுடைய வரவேற்பு சென்னையில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பிரேம்ஜி.  கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் ஒரு முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருந்த பிரேம்ஜியின் திருமணம் எப்போது நடைபெறும் என அனைத்து தரப்பினரும் […]

By :  Rohini
Update: 2024-06-19 07:11 GMT

premji

Premji: சமீபத்தில் தான் இசையமைப்பாளரும் நடிகரும் பாடகருமான பிரேம்ஜியின் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அது மட்டுமல்லாமல் இவர்களுடைய வரவேற்பு சென்னையில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பிரேம்ஜி. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் ஒரு முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருந்த பிரேம்ஜியின் திருமணம் எப்போது நடைபெறும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த காதல் கை கூடாததால் சோகத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இத்தனை நாட்களாக பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் ஒரு சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

இதையும் படிங்க: மோகன்லால் பலமுறை சொல்லியும் கேட்காத விஜய்!.. கோபத்தில் பேசாமல் போன நடிகர்!..

அதன் பிறகு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பார்த்த இந்து என்ற பெண்ணை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பிரேம்ஜி என்றும் கூறப்படுகிறது. இவர்கள் திருமணத்திற்கு இளையராஜா வரவில்லை. ஆனால் திருமணம் முடிந்து இரண்டு நாள் கழித்து பிரேம்ஜியும் அவருடைய காதல் மனைவியும் இளையராஜாவை அவரது வீட்டில் போய் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

மேலும் பிரேம்ஜியின் திருமணத்தை அவரது அண்ணனும் இயக்குனருமான வெங்கட் பிரபு தான் முன்னாடி இருந்து நல்ல முறையில் நடத்தி வைத்தா.ர் வெங்கட் பிரபுவுக்கு என சில கேங் இருக்கிறார்கள். அவர் எடுக்கும் எல்லா படங்களிலும் அந்த நண்பர்களை பார்க்கலாம். அதைப்போலவே பிரேம்ஜியின் திருமணத்திலும் அந்த நண்பர்கள் படை சூழ திருமணம் இனிதே நடைபெற்றது.

இதையும் படிங்க: ராமராஜன், மோகனை விட கவுண்டமணிக்கு தான் ரீ-என்ட்ரி சூப்பரா அமையப்போகுதா? அதையும் தான் பார்ப்போமே..!

இந்த நிலையில் பிரேம்ஜியின் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் பிரேம்ஜி அவரது வீட்டில் ஏதோ சமைத்துக் கொண்டு இருப்பது போல அந்த வீடியோவில் பதிவாகி இருக்கின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். அதுவும் நண்பர்களுடன் பார்ட்டி, ட்ரிப் என குதூகலமாக இருந்த பிரேம்ஜி கடைசியில் திருமணத்திற்கு பிறகு இப்படி மாறிவிட்டாரே என்றும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அந்த வீடியோவில் பதிவாகி உள்ள ரீல்ஸ் பாடலும் அப்படித்தான் இருக்கின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C8ZYYiUpnM_/?igsh=d2x1cjJ5N2hybjZv

Tags:    

Similar News