அடுத்த விஜய் நீதான்!.. ஏத்திவிடும் நட்பு வட்டாரம்!.. தளபதி ஆகும் கனவில் காய்நகர்த்தும் எஸ்.கே...
Sivakarthikeyan: சினிமாவில் எப்போதும் சில வெற்றிடங்கள் ஏற்படும். கவுண்டமணி ஃபீல்ட் அவுட் ஆன போது அவரது ஸ்டைலிலேயே மற்றவர்களை நக்கலடித்து காமெடி செய்யும் ரூட்டை பிடித்தவர் சந்தானம். அது அவருக்கு பல படங்களில் கை கொடுத்து பல வருடங்கள் ஒரு பிஸியான காமெடி நடிகராக இருந்தார்.
அவர் ஹீரோவாக நடிக்க போனதும் காமெடிக்கான இடத்தை யோகிபாபு பிடித்தார். எம்.ஜி.ஆர் மறைந்த பின் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் இடத்தை ரஜினி பிடித்தார். ரஜினிக்கு பின் அந்த இடம் யாருக்கு என்கிற பஞ்சாயத்து பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் விஜய் பெயர்தான் அதிகம் அடிப்பட்டது. இது ரஜினியை காக்கா - கழுகு கதை சொல்லும் அளவுக்கு கொண்டு சென்றது.
இதையும் படிங்க: விஜய்.. விஜய் சேதுபதி.. விஜயகாந்த்!.. கோலிவுட்டில் அதிகரிக்கும் டீஏஜிங்!.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான்!..
இப்போது விஜய் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். இதையடுத்து ‘விஜயின் இடத்தை பிடிக்கப்போவது யார்?’ என்கிற கேள்வியும் திரையுலகில் எழுந்துள்ளது. அந்த ஆசை பல நடிகர்களுக்கும் இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு அதிகமாகவே இருக்கிறது.
ரஜினி, விஜய் பாணியில் கமர்ஷியல் கதைகளில் நடித்து குழந்தைகளுக்கும் பிடித்த நடிகராக மாறினார் சிவகார்த்திகேயன். இது எல்லோக்கும் அமையாது. குழந்தைகளுக்கு யாரை பிடிக்கிறதோ அவர்தான் சூப்பர்ஸ்டார் என்பதுதான் தமிழ் சினிமா இதுவரை பார்த்த வரலாறு. அதை நோக்கிய பயணித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க: லோகேஷ் படத்துக்கு தேதி குறித்த ரஜினி!.. பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தும் தலைவர்!..
துவக்கத்தில் காமெடி கதைகளில் நடித்தாலும் மெல்ல மெல்ல ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார் சிவகார்த்திகேயன். திடீரென குழந்தைகளுக்கு பிடிப்பதுபோல் ஏலியன் படத்திலும் நடித்துவிட்டார். ஒருபக்கம் ‘நீதான் அடுத்த விஜய். படம்லாம் கரெக்ட்டா தேர்ந்தெடுத்து நடி’ என அவரின் நட்பு வட்டாரங்கள் சொல்ல அலார்ட் ஆகியிருக்கிறாராம் எஸ்.கே.
எனவேதான், விஜயை வைத்து 2 ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறார். இது ஒரு பக்கா ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளது. விஜய்க்கு ஒரு துப்பாக்கி, கத்தி போல சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், கதைகளை கவனமாக கேட்டு வருகிறாராம். ஆனால், எப்படி ஒரு ரஜினியோ அப்படி ஒரு விஜய்தான். அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ரகசிய திருமணம் செய்ய இருக்கும் சிவகார்த்திகேயன் நாயகி… வேற லெவலில் போட்ட ப்ளான்…