மிரட்டிய சிவக்குமார்!.. அதிர்ந்துபோன அர்ஜூன்.. அவரு அப்பவே அப்படிதான் போலயே!..
Actor Sivakumar: சிவகுமார் தமிழ் சினிமாவில் 70ஸ்,80களில் முன்னணியில் இருந்த நடிகர். ஆரம்பத்தில் இவர் துணை கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தாலும் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வந்தார். இவர் சிட்டுகுருவி, அவன் அவள் அது, பூந்தளிர், ஆனந்த ராகம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்புக்கு அந்த காலத்தில் தனி ரசிகர் பட்டாளாமே உண்டு. சினிமாவில் எந்தவொரு கெட்டபழக்கமும் இல்லாத ஒரே நடிகர் சிவகுமார்தான். இவர் சினிமாவை தாண்டி ஒரு சிறந்த ஓவியரும் கூட. சினிமாவிற்கு […]
Actor Sivakumar: சிவகுமார் தமிழ் சினிமாவில் 70ஸ்,80களில் முன்னணியில் இருந்த நடிகர். ஆரம்பத்தில் இவர் துணை கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தாலும் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வந்தார். இவர் சிட்டுகுருவி, அவன் அவள் அது, பூந்தளிர், ஆனந்த ராகம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்புக்கு அந்த காலத்தில் தனி ரசிகர் பட்டாளாமே உண்டு. சினிமாவில் எந்தவொரு கெட்டபழக்கமும் இல்லாத ஒரே நடிகர் சிவகுமார்தான். இவர் சினிமாவை தாண்டி ஒரு சிறந்த ஓவியரும் கூட. சினிமாவிற்கு வருவதற்கு முன் தான் ஒரு நல்ல ஓவியனாக வரவேண்டும் என்றுதான் நினைத்தாராம்.
இதையும் வாசிங்க:சிவாஜியை பார்த்ததும் மனநலம் பாதிக்கப்பட்டவரின் ரியாக்ஷன்! திக்குமுக்காட வைத்த சம்பவம்
இவர் அந்த காலத்தில் மட்டுமல்லாமல் 90ஸ்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பூவெல்லாம் உன் வாசம், பசும்பொன், சேது போன்ற படங்களில் இக்கால நடிகர்களுடனும் தனது நடிப்பினை அசத்தலாக வெளிக்காட்டியிருந்தார்.
இவருக்கு பொதுவாக தன்னுடன் நெருங்கி பழகுபவர்கள் சிகரெட் பிடித்தாலும் கோபப்படுவாராம். அப்படி ஒரு முறை இவர் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வலைபேச்சு எனும் யூடியூப் சேனலின் மூலம் பிரபலமானவர் பிஸ்மி. இவர் ஒரு முறை சிவகுமாரை சந்திக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றுள்ளார்.
இதையும் வாசிங்க:மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த நாகேஷ்… ரகசியத்தை உடைக்கும் பிரபல நடிகை…
அப்போது அங்கு சிவகுமாரின் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். அப்போது அங்கு சென்ற பிஸ்மியை சிவக்குமார் ‘யோவ் பிஸ்மி.. இங்க வாயா’.. என அழைத்துள்ளார். அப்போது அங்கு அர்ஜூன், நிரோஷா போன்ற நடிகர்களும் இருந்துள்ளனர். அதை கண்டு பிஸ்மி பயந்துவிட்டாராம்.
உடனே சிவகுமார் பிஸ்மியை பார்த்து ‘நீ என்ன அவ்வளவு பெரிய ஆளாகிட்டியா?’ என கேட்டாராம். அங்கிருந்த அர்ஜூன் எல்லாரும் அதை கண்டு மிரண்டு போய் பார்த்தனராம். உடனே சிவக்குமார் அர்ஜூனிடம் இவரிடம் தான் 100 ரூபாய் கடன் வாங்கியதாகவும், மேலும் தனது குடும்ப பிரச்சினையில் அதனை மறந்துவிட்டேன் எனவும் கூறினாராம்.ஆனால் பிஸ்மி இன்றுவரை அப்பணத்தை என்னிடம் கேடவில்லை என கூறி அந்த 100 ரூபாயை பிஸ்மியிடம் கொடுத்தாராம்.
இதையும் வாசிங்க:நடிக்க ஓகே சொன்ன சிவாஜி.. ஆனாலும் ரிஜெக்ட் செய்த சேரன்!.. இதுதான் காரணமா?..