விஜய்க்கு பேசவே தெரியல!.. எப்படியாவது பேச வைங்க ப்ளீஸ்... பிரபலத்திடம் புலம்பிய எஸ்.ஏ.சி..

Actor Vijay: நடிகர் விஜய் சிறு வயது முதலே மிகவும் அமைதியானவர். ரிசர்வ் டைப் என சொல்வார்கள். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். யாராவது பேசினாலும் ஒரு வார்த்தையில் மட்டுமே பதில் சொல்வார். அதிகம் பேச அவருக்கு வராது.. அது பிடிக்காதும் கூட. யாரிடமும் கலகலப்பாக பேசமாட்டார். சிறுவயது முதல் விஜயை தெரிந்த எல்லோருக்கும் இது தெரியும். அதனால்தான், விஜய் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது அவரின் அப்பா எஸ்.ஏ.சி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அம்மா மூலம் அப்பாவிடம் […]

Update: 2023-11-03 10:23 GMT

Actor Vijay: நடிகர் விஜய் சிறு வயது முதலே மிகவும் அமைதியானவர். ரிசர்வ் டைப் என சொல்வார்கள். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். யாராவது பேசினாலும் ஒரு வார்த்தையில் மட்டுமே பதில் சொல்வார். அதிகம் பேச அவருக்கு வராது.. அது பிடிக்காதும் கூட. யாரிடமும் கலகலப்பாக பேசமாட்டார்.

சிறுவயது முதல் விஜயை தெரிந்த எல்லோருக்கும் இது தெரியும். அதனால்தான், விஜய் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது அவரின் அப்பா எஸ்.ஏ.சி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அம்மா மூலம் அப்பாவிடம் சொல்ல வைத்து, அடம்பிடித்து நடிகரானவர்தான் விஜய். சினிமாவில் மட்டுமே வசனம் பேசும் விஜய் நிஜவாழ்வில் அதற்கு நேர் எதிர்.

இதையும் படிங்க: என் மனைவி சங்கீதா மாதிரியே பேசுறீங்க!.. லியோ பட நடிகையை பார்த்து விஜய் இப்படி சொல்லியிருக்காரே!

சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆனபின்பும் கூட அவர் அப்படித்தான் இருந்தார். படப்பிடிப்பில் நடிகை மற்றும் சக நடிகர்கள் யாருடனும் சகஜமாக பேசமாட்டார். எப்போதும் தனிமையில் இருப்பார். ஷாட்டுக்காக இயக்குனர் அழைத்தால் வருவார். வசனத்தை பேசி நடித்துவிட்டு கேரவானுக்கு போய்விடுவார். இப்போதும் விஜய் அப்படித்தான். பெரிய மாற்றம் எல்லாம் அவருக்குள் நிகழ்ந்துவிடவில்லை.

பேசுவது பிடிக்காது என்பதால்தான் அவர் யாருக்கும் பேட்டி கூட கொடுப்பதில்லை. ஆனால், இப்போது கொஞ்சம் பேச துவங்கியிருக்கிறார் என்பது உண்மை. மேடைகளில் பேசவே தயங்கும் விஜய் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை சொல்லி உற்சாகப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய்க்கு ‘இளைய தளபதி’ பட்டத்தை கொடுத்தவர் யார் தெரியுமா?!.. ஒரு ஆச்சர்ய தகவல்!…

பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சி பிஸ்மி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நான் அடிக்கடி எஸ்.ஏ.சி அலுவலகத்திற்கு போய் அவரிடம் பேசுவேன். அப்போது அவர் ‘நீங்கள் இப்படி பேசுகிறீர்கள். என் மகன் விஜய் பேசவே மாட்டேங்குறான்.. அவனை எப்படியாவது பேச வையுங்கள்’ என சொல்லிவிட்டு விஜயை அழைப்பார்.

‘சார் உன்னை பேட்டி எடுக்க வந்திருக்கிறார். அவரிடம் பேசு’ என சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விடுவார். நான் விஜயிடம் ஜாலியாக பேசி பல கேள்விகளை கேட்பேன். ஆனால், ‘ம்ம்.. ஆமாம் சார்.. இல்ல சார்’ என ஒரு வார்த்தையில் மட்டுமே விஜய் பதில் சொல்வார். அப்படிப்பட்டவர் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்திருப்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது’ என பேசினார்.

Tags:    

Similar News