என் மனைவி சங்கீதா மாதிரியே பேசுறீங்க!.. லியோ பட நடிகையை பார்த்து விஜய் இப்படி சொல்லியிருக்காரே!

0
606

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஜனனிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நடிகர் விஜயின் காபி ஷாப்பில் வேலை செய்யும் பெண்ணாக கூடவே இருக்கும் காட்சிகள் அதிகம் கிடைத்த நிலையில் ரொம்பவே மகிழ்ச்சியான ஜனனி சமீபத்திய பேட்டியில் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் தன்னிடம் எப்படி எல்லாம் பேசினார், தன்னைப் போலவே அவரும் ஒரு சைலன்ட் பார்ட்டி என்பதை அறிந்து ரொம்பவே ஜாலியாக இருந்தது என பல விஷயங்களை கூறியுள்ளார்.

லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கடந்த ஆறாவது சீசனில் கலந்து கொண்டவர் ஜனனி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணனுக்கு வாய்ப்பு கிடைத்தது போல லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: சட்டை பட்டனை கழட்டி செம்மையா ஒரு லுக்!.. நான் காலி என நைட் ஃபுல்லா பாட ஆரம்பித்த ஓவியா ஆர்மி!..

சாண்டி மாஸ்டருடன் அந்தக் காபி ஷாப் சண்டையில் ஜனனியின் காட்சிகள் வேற லெவலில் அமைந்திருக்கும். லியோ படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் எப்போது வந்தாலும் அனைவருக்கும் ஹாய் சொல்லிவிட்டு புதிய நடிகர் எப்படி நடந்து கொள்வாரோ அதே போலத்தான் தளபதி விஜய்யும் இருப்பார் என்றும் நான் பேசியதை கேட்டதும் என் ஒய்ஃப் போலவே பேசுறீங்க.. என் வைஃப்பும் ஜாப்னா தான் தெரியுமா என்றார்? தெரியும் சார் எனக் கூறினேன். தனது மனைவி மற்றும் மகன் குறித்து செட்டில் நிறைய பேசுவார்.

என்னுடைய ரிலீஸ் ஒருமுறை மாட்டிக் கொண்டது. அதைப் பார்த்து விஜய் அப்படி விழுந்து சிரித்தார். த்ரிஷா மேடம் என்ன ஆச்சு அப்படின்னு கேட்டாங்க, என்னோட ரீல்ஸ் என சொன்னதும் ஓ அதுதான் விஷயமா என சொல்லிவிட்டு அவர்களும் சிரிச்சாங்க என லியோ படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் ஜனனி.

இதையும் படிங்க: தலைவர் 170, 171னு நடிக்க முடியுது.. அரசியலுக்கு மட்டும் வர முடியாதா?.. வாயடைத்துப் போன ரஜினி ரசிகர்!..

லியோ படத்தில் நடித்த நிலையில், நடிகை ஜனனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.

google news