தன் வழக்கமான பாணியையே பிரேக் செய்து வெற்றிகண்ட விஜயகாந்த்! இந்த படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா?

Actor Vijayakanth: விஜயகாந்த் இறந்து இரண்டு வாரகாலம் ஆகியும் இன்னும் அவர் சமாதியை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இன்று விஜயகாந்தின் விதவிதமான கெட்டப்களை போட்டுக் கொண்டு பெரும்பாலான கலைஞர்கள் அவர் நினைவிடத்தில் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பாக வரும் 19 ஆம் தேதி அவருக்கு இரங்கல் கூட்டமும் நடத்த இருக்கிறார்கள். இப்படி கேப்டன் மீது அதிகளவு அன்பு கொண்ட பல நெஞ்சங்கள் அவரை சுற்றியே இருந்திருக்கின்றனர். அந்தளவுக்கு கேப்டன் செய்த […]

By :  Rohini
Update: 2024-01-09 02:30 GMT

viji

Actor Vijayakanth: விஜயகாந்த் இறந்து இரண்டு வாரகாலம் ஆகியும் இன்னும் அவர் சமாதியை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இன்று விஜயகாந்தின் விதவிதமான கெட்டப்களை போட்டுக் கொண்டு பெரும்பாலான கலைஞர்கள் அவர் நினைவிடத்தில் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சங்கம் சார்பாக வரும் 19 ஆம் தேதி அவருக்கு இரங்கல் கூட்டமும் நடத்த இருக்கிறார்கள். இப்படி கேப்டன் மீது அதிகளவு அன்பு கொண்ட பல நெஞ்சங்கள் அவரை சுற்றியே இருந்திருக்கின்றனர். அந்தளவுக்கு கேப்டன் செய்த பல நல்ல காரியங்கள் தான் காரணம்.

இதையும் படிங்க: சிவாஜி படத்தால் கடுப்பான படக்குழு!… அதையே படத்தலைப்பாக்கிய தயாரிப்பு நிறுவனம்!..

இந்த நிலையில் சரத்குமாருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் புலன் விசாரணை திரைப்படம். விஜயகாந்த் இல்லை என்றால் என் கெரியரே காலியாகியிருக்கும் என புலன் விசாரணை படத்தை பற்றி சரத்குமார் கூறியிருந்தார். அந்தப் படத்தை பற்றி பன்னீர்செல்வம் என்பவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது ரீ ரிக்கார்டிங் இல்லாமல் முதல் பாதியில் வசனத்தை எடுத்துக் கொண்டால் மொத்தமே 4 பக்கம்தானாம். இரண்டாம் பாதி வசனங்கள் 5 பக்கங்கள் இருக்குமாம். படத்தின் டபுள் பாஸிட்டி பார்த்தால் ஒரு தயாரிப்பாளராக இருக்கும் பட்சத்தில் பயந்து ஓடியிருப்பாராம். படமாக வந்து போவது அது வேற விஷயம்.

இதையும் படிங்க: வடிவேலு வீட்டு பக்கம் போனால் போலீஸ் கிட்ட போவேன்… கடும் கோபம் காட்டிய விஜயகாந்த்!..

முதலில் இந்தப் படத்தின் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லையாம். ராவுத்தர் மட்டுமே மிகுந்த நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார். செல்வமணியும் ஓரளவு நம்பிக்கையுடன் இருந்தாராம். ஏனெனில் படத்தில் விஜயகாந்த் எப்பொழுதுமே ஒரு நாயுடன் வருவதும் போவதும் என்ன நாய்க்காரனா என்று கூட கேட்டார்களாம்.

அந்தளவுக்கு விஜயகாந்துக்கே உள்ள பாணியான பாடல்கள், டூயட், காமெடி என எதுவுமே இந்த படத்தில் இல்லை என்றும் கேப்டனை வேற மாதிரி காட்டவே இப்படி ஒரு படத்தை எடுத்ததாகவும் கூறியிருந்தார். மொத்தப் படத்தையும் 60 நாள்களில் எடுக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் ஒரு 30 % படத்தை வெறும் 5 நாள்களில் எடுத்து முடித்திருக்கிறார்கள். அந்தளவுக்கு வேகமாக படப்பிடிப்பு போய்க் கொண்டிருந்ததாம்.

இதையும் படிங்க: 70 கேமரா முன்னாடி தான பேசுன!.. நிக்‌ஷனை கிழித்து தொங்க விட காத்திருக்கும் வினுஷா!..

கடைசியில் அந்தப் படத்திற்கு ஒரு உயிர் கொடுத்தமாதிரி அமைந்ததே இளையராஜாவின் இசைதான் என்று அந்த பிரபலம் கூறினார். மேலும் இந்தப் படத்திற்கான வியாபாரத்தையும் ராவுத்தர் வித்தியாசமாக செய்திருக்கிறார். அதாவது படத்தின் ப்ரிவ்யூ ஷோ பார்த்து வினியோகஸ்தரர்கள் படத்தை வாங்கினால் 7 இலக்கத்தில் விலையாம்.

ஆனால் ப்ரிவ்யூ பார்க்காமல் வாங்கினால் 6 இலக்கத்தில் விலையாம். இதன் மூலமும் நிறைய லாபம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News