Connect with us
vinu

Biggboss Tamil 7

70 கேமரா முன்னாடி தான பேசுன!.. நிக்‌ஷனை கிழித்து தொங்க விட காத்திருக்கும் வினுஷா!..

Actress Vinusha: வெற்றிகரமாக தன் 100 நாள்களை நிறைவு செய்திருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன். கடந்த வாரம் விசித்ரா வெளியேற்றப்பட்ட நிலையில் வீட்டில் ஃபைனலை எதிர்கொண்டு விஷ்ணு, விஜய் வர்மா, அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ் போன்ற போட்டியாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் ஆளாக ஃபினாலே டிக்கெட்டை தட்டிப் பறித்த விஷ்ணுவின் முகத்தில் ஏதோ ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கின்றன. யார் என்ன சொல்வார்களோ, அதுவும் வெளியில் இருந்து கெஸ்டாக உள்ளே வரும் போட்டியாளர்களின் கமெண்ட் என்னவாக இருக்குமோ என்று பயந்து கொண்டே இருக்கிறார்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா? அட ஓபனாவா சொல்றது!..

இந்த வாரம் முழுவதும் கெஸ்டாக சில போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கின்றனர். அதில் வினுஷா இன்று உள்ளே வருகிறார்.  ஆரம்பத்தில் எவிக்ட் ஆகி வெளியேற்றப்பட்டவர் இன்றுதான் மீண்டும் கெஸ்டாக உள்ளே வர இருக்கிறார்.

ஆனால் வினுஷாவின் எண்டிரி விஷ்ணு, மணி, தினேஷ் இவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வந்ததும் இவர்கள் மூன்று பேரிடம்தான் வினுஷா அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தினேஷ் வினுஷாவிடம் ‘தம்பி போன் பண்ணி பேசுனானா?’ என நிக்‌ஷனை பற்றி மறைமுகமாக கேட்டார்.

இதையும் படிங்க: என்னப் பத்தி சொன்னா உங்களை பத்தி எல்லாத்தையும் சொல்லிருவேன்! ரஜினியை மிரட்டிய வில்லன் நடிகர்

அதற்கு வினுஷா ‘ம்ம் பேசுனான். 70 கேமிரா முன்னாடிதான பேசுன. அதே 70 கேமிரா முன்னாடி ஷோல பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்’ என்று சொல்லியிருக்கிறாராம். ஒரு வேளை நிக்‌ஷனும் கெஸ்டாக வீட்டிற்குள் வர வாய்ப்பிருக்கிறது.

இதை வைத்துதான் வினுஷா அப்படி சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது. எந்த கேமிரா முன்னாடி வினுஷாவை பற்றி நிக்‌ஷன் அப்படியெல்லாம் பேசினாரோ அதே கேமிரா முன்னாடி மீண்டும் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள். கெஸ்டாக நிக்‌ஷன்  வந்ததும் கண்டிப்பாக ஒரு பஞ்சாயத்து இருக்கிறது.

இதையும் படிங்க: விஸ்வாசம் படத்துல டைம் டிராவல் காட்சி இருக்கு தெரியுமா?… ஆனா சிவா சார் இது ஓவரா இல்ல!

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top