கேப்டன் மில்லர் படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா? அட ஓபனாவா சொல்றது!..

Captain miller: தனுஷ் தன்னுடைய வாத்தி படத்தினை தொடர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் நிலையில் இப்படத்தினை தளபதி விஜய் பார்த்துவிட்டு சொன்ன கருத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இப்படம் வரும் 12ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதையும் படிங்க: என் அப்பா, அண்ணன் இறந்தப்போ கூட எனக்கு இப்படி ஆகல!.. விஜயகாந்துக்காக உருகும் எஸ்.ஏ.சி.
இப்படம் எல்டிடிஇ கேப்டன் மில்லர் பற்றிய உண்மை கதையாக இருக்காது. ஆக்ஷன் அட்வென்சர் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இப்படத்தில் ஐட்டம் பாடல் கிடையாது. 60 சதவீதம் கதை மற்றும் 40 சதவீதம் ஆக்ஷன் என இயக்குனர் அருண் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில், சித்தார்த் நுனி பின்னர் மாற்றப்பட்டார். பின்னர் சிவராஜ்குமாரை பார்த்த அருண் கதையை 40 நிமிஷத்தில் பெங்களூரில் சொல்லி முடித்தாராம். அதைகேட்ட சிவராஜ்குமார் உடனே ஓகே சொல்லிவிட்டதாக தகவல். இது ஜெயிலர் படத்தினை தொடர்ந்து அவரின் இரண்டாவது தமிழ் படமாகி இருக்கிறது.
இதையும் படிங்க: என்னப் பத்தி சொன்னா உங்களை பத்தி எல்லாத்தையும் சொல்லிருவேன்! ரஜினியை மிரட்டிய வில்லன் நடிகர்