இயக்குனர் பண்ண ஒரே தப்பு! விக்ரம் கெரியரே போச்சு - சொன்னத கேட்டிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?

Actor Vikram: சினிமாவிற்காக மெனக்கிடும் சில நடிகர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் தன் கெரியரை ஆரம்பித்திருக்கிறார். போகப் போக நடிக்க ஆரம்பித்து அந்தப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் தோல்விகளைத்தான் தழுவியது. அவரின் வாழ்க்கையில் மைல்கல்லாக இருந்த படம் என்றால் அது பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது படம்தான். அந்தப் படம் விக்ரமின் கெரியரையே புரட்டிப் போட்டது. மொட்டைத்தலையுடன் புத்திசுவாதினம் இல்லாமல் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் திரும்பி பார்க்க […]

By :  Rohini
Update: 2023-11-09 20:00 GMT

vikram

Actor Vikram: சினிமாவிற்காக மெனக்கிடும் சில நடிகர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் தன் கெரியரை ஆரம்பித்திருக்கிறார். போகப் போக நடிக்க ஆரம்பித்து அந்தப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் தோல்விகளைத்தான் தழுவியது.

அவரின் வாழ்க்கையில் மைல்கல்லாக இருந்த படம் என்றால் அது பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது படம்தான். அந்தப் படம் விக்ரமின் கெரியரையே புரட்டிப் போட்டது. மொட்டைத்தலையுடன் புத்திசுவாதினம் இல்லாமல் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

இதையும் படிங்க: மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..

வித்தியாசமான கெட்டப்பை போடுவதற்கு சேது படம்தான் விக்ரமுக்கு தூண்டுகோலாக அமைந்தது. அந்தப் படத்தில் இருந்தே அவர் நடித்த பெரும்பாலான படங்களில் விதவிதமான கெட்டப்களை போட்டு மிரட்டினார். அந்த வகையில் மிகவும் எதிர்பார்த்த படமாக அமைந்தது சுசீ கணேசன் இயக்கத்தில் வெளிவந்த கந்தசாமி திரைப்படம்.

விக்ரம் கெரியரிலேயே அதிக பொருட்செலவு செய்து எடுக்கப்பட்ட படமாக கந்தசாமி அமைந்ததாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறினார். மேலும் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டிய திரைப்படம். ஆனால் இயக்குனரின் செயலால் தோல்விப்படமாக அமைந்தது என தாணு கூறினார்.

இதையும் படிங்க: அந்த டைரக்டர் என்னை தூங்கவே விடவில்லை!.. பல வருடம் கழித்து திரிஷா சொன்ன சீக்ரெட்..

கந்தசாமி படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 15 நிமிடம் காட்சிகளை கொண்ட மிக நீளமான படமாம். ஆரம்பத்தில் தாணு சுசி கணேசனிடம் சொல்லியிருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்தால் படம் எதிர்பார்த்ததையும் விட நன்றாக போகும். அதனால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இதனால் எதுவும் பின்விளைவுகள் ஏற்பாடுமாயின் உன்னை தேடி வரும் ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் என இவர்களின் வரவும் குறைய வாய்ப்பிருக்கிறது. அதனால் நன்றாக யோசித்துக் கொள் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் சுசி கணேசன் என்னை நம்புங்கள் என்று சொல்ல தாணுவும் இறங்கினாராம்.

இதையும் படிங்க: குறுக்கே வந்த நடிகர்!.. எம்.ஜி.ஆர் நடிக்க பயந்த அந்த படம்!… ஆனால் நடந்ததே வேற!…

ஆனால் தாணு சொன்னப்படியேதான் நடந்ததாம். படம் தோல்விப்படமாக அமைந்துவிட்டது. ஆனால் எந்தளவுக்கு விளம்பரம் செய்தோமோ அதைத்தான் தயாரிப்பு செலவுக்கும் பயன்படுத்தினோம் என்றும் பெரிய நஷ்டம் எல்லாம் இல்லை என்றும் தாணு கூறினார். ஆனால் இந்தப் படத்தின் மூலம் விக்ரம் நிறைய விமர்சனத்திற்கும் ஆளானார்.

Tags:    

Similar News