எம்.ஜி.ஆர் கொடுத்த முத்தம்!.. 2 நாட்கள் முகத்தை கழுவாமல் இருந்த நடிகை... அட அவரா?!..

எம்.ஜி.ஆருக்கு மிகவும் சீனியர் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆர் நாடக உலகிற்கு செல்லும் முன்பே நாடகத்திற்கு போனவர். வீட்டில் அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு ரயில்வே நிலையத்தில் படித்திருந்த அவரை ஒரு நாடக கம்பெனி முதலாளி ‘என்னுடன் வருகிறாயா?’ என கேட்க, அப்படி நடிப்பு உலகுக்கு போனவர்தான் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆரை விட அதிக நாடகங்களில் நடித்தவர் இவர். இன்னும் சொல்லப்போனால் நாடகத்தை சொந்தமாக நடத்தியவர் எம்.ஆர்.ராதா. இவரின் நாடங்களில் புரட்சிகரமான, பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதற்காக […]

Update: 2024-05-29 01:12 GMT

எம்.ஜி.ஆருக்கு மிகவும் சீனியர் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆர் நாடக உலகிற்கு செல்லும் முன்பே நாடகத்திற்கு போனவர். வீட்டில் அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு ரயில்வே நிலையத்தில் படித்திருந்த அவரை ஒரு நாடக கம்பெனி முதலாளி ‘என்னுடன் வருகிறாயா?’ என கேட்க, அப்படி நடிப்பு உலகுக்கு போனவர்தான் எம்.ஆர்.ராதா.

எம்.ஜி.ஆரை விட அதிக நாடகங்களில் நடித்தவர் இவர். இன்னும் சொல்லப்போனால் நாடகத்தை சொந்தமாக நடத்தியவர் எம்.ஆர்.ராதா. இவரின் நாடங்களில் புரட்சிகரமான, பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதற்காக பல எதிர்ப்புகளையும் சந்தித்தவர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ரசிகராக கேப்டன் செய்த தரமான சம்பவம்!.. அவர் அப்பவே அப்படித்தான் போல!..

ஆனாலும், அவையெல்லாவற்றையும் தாண்டி நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இவரின் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் திரைப்படம் இப்போதுவரை எவர் கிரீன் கிளாசிக் படமாக இருக்கிறது. இப்போதும் இப்படத்தின் வீடியோக்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

எம்.ஆர்.ராதாவை தொடர்ந்து அவரின் மகன் எம்.ஆர்.வாசு, ராதாரவி என பலரும் சினிமாவுக்கு வந்தனர். இதில், ராதிகாவும் ஒருவர். பதினாறு வயதினிலே படத்திற்கு பின் பாரதிராஜா தான் இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்திற்கு கதாநாயகியை தேடிவந்தபோது கிடைத்தவர்தான் ராதிகா.

இதையும் படிங்க: முதல்வரான பின்னரும் தேடிப்போய் நடிகரின் காலில் விழுந்த எம்.ஜி.ஆர்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?!..

ஏனெனில் எந்த படத்திலும் நடிக்காத, முகம் வெகுளி போல இருக்க வேண்டும் என பாரதிராஜா என்ன ஆசைப்பட்டாரோ அப்படியே இருந்தது ராதிகாவின் முகம். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு ராதிகாவுக்கு கிடைத்தது.

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘எம்.ஜி.ஆரின் நிறத்தை பார்த்து அசந்துபோனேன். நான் எம்.ஆர்.ராதவின் மகள் என்பதால் அன்பு காட்டினார். என்னை மடியில் அமரவைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். 2 நாட்கள் என் முகத்தை நான் கழுவவே இல்லை’ என கூறி சிரித்தார் ராதிகா.

Tags:    

Similar News