இந்த வயசுல இவ்வளவு பேராசை ஆகாதுமா..கமல் கூட நடிக்க இதுதான் காரணம்..அபிராமியின் பளிச் டாக்..
அபிராமி தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவருடன் அர்ஜுன், பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். மேலும் இவர் நடிகர் பிரபுவுடன் இணைந்து மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். என்னதான் பிரபுவுடன் இணைந்து பணியாற்றினாலும் பிரபுவின் தந்தையான சிவாஜியை ஒரு முறை கூட […]
அபிராமி தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவருடன் அர்ஜுன், பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
மேலும் இவர் நடிகர் பிரபுவுடன் இணைந்து மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். என்னதான் பிரபுவுடன் இணைந்து பணியாற்றினாலும் பிரபுவின் தந்தையான சிவாஜியை ஒரு முறை கூட பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
இதையும் வாசிங்க: கால் சென்டர்ல கமல்ஹாசன்!.. அமெரிக்காவுல என்னை வேலை பண்ணிட்டு இருக்காரு பாருங்க ஆண்டவர்!..
மேலும் இவர் நடிகர் சரத்குமாருடன் இணைந்து சமுத்திரம், சமஸ்தானம், தோஸ்த் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படியான படங்களின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். மேலும் இவர் 36 வயதினிலே, மாறா போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து விருமாண்டி படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்போது வரை இவருக்கு எதற்காக இப்படத்தில் கமல் தன்னை தேர்வு செய்தார் என தெரியவில்லையாம். அதைபற்றி கமலிடம் கேட்ட பொழுது கமல் ஒருமுறை மதுரை ஜல்லிகட்டிற்கு சென்றதாகவும் அப்போது அங்கு ஒரு பெண் கம்பீரமாக கண்ணாடி அணிந்து உட்காந்திருத்ததாகவும் அதனை கண்டதும் இந்த கதாபாத்திரத்திற்கு அபிராமி சரியாக இருப்பார் என தோன்றியதாகவும் கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க: ஹெச்.வினோத் படத்துக்காக மீண்டும் துப்பாக்கி எடுக்கும் கமல்ஹாசன்!.. மெர்சலாக்கும் டிரெய்னிங் வீடியோ…
மேலும் அபிராமிக்கு தமிழ் சினிமா நடிகர்கள் அனைவருடனும் நடிக்க வேண்டும் என்று விருப்பமாம். இவர் அவர் என இல்லை எனக்கு இந்த விஷயத்தில் பேராசைதான் என அவர் ஓபனாக கூறியுள்ளார். மேலும் இவர் தான் இறக்கும் வரை சினிமாவில் நடிப்பதுதான் என்னுடைய ஆசை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இவருக்கு பள்ளி கல்லூரி காலத்தில் தனக்கு நிறைய காதல் கடிதங்கள் வந்ததாகவும் ஆனால் இதுவரை சினிமா துறையில் அந்த மாதிரியான எந்த கடிதமும் வந்ததில்லை என சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க: கூட்டத்துல கட்டுச்சோத்த அவுத்த மேக்கப் மேன்!.. லீக்கான KH 234 ரகசியம்.. கடுப்பான கமல்ஹாசன்?..