Connect with us

Cinema News

கூட்டத்துல கட்டுச்சோத்த அவுத்த மேக்கப் மேன்!.. லீக்கான KH 234 ரகசியம்.. கடுப்பான கமல்ஹாசன்?..

இந்தியன் 2, பிரபாஸின் கல்கி என பிஸியாக இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக அ. வினோத் இயக்கத்தில் 233வது படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், அதிரடியாக கமல்ஹாசனின் 234வது படத்தின் அறிவிப்பு தற்போது கசிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அதற்கு போட்டியாக படக்குழுவே இப்படியொரு லீக்கை செய்துள்ளார்களா என்றும் ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: LCUவுக்கு தலையாட்டிய தலைவர்!.. அந்த உச்ச நடிகரையும் உள்ளே இழுக்க லோகேஷ் கனகராஜ் பலே ஸ்கெட்ச்!..

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படங்களை முடித்து விட்டு அடுத்ததாக கமல் படத்திற்கான திரைக்கதை வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில், தேசிய விருது பெற்ற மேக்கப் மேன் ரஞ்சித் அம்பாடியை KH 234 படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அதனை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி விட்டார்.

ஆனால், போகிற போக்கில் காஸ்டிங் ரகசியத்தையும் கூட்டத்துல கட்டுச்சோத்த அவிழ்ப்பது போல அவிழ்த்தது தான் தற்போது கமல்ஹாசனின் 234வது படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க என்கிற தகவல் வெளியாக காரணமாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆடியோ விழாவுக்கு கேட்டை இழுத்து மூடிய ஸ்டேடியம்! விஜய்னா நோ.. இது என்னப்பா புது பிரச்சினையா இருக்கு?

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளனர். மேலும், மலையாள திரையுலகின் சார்மிங்கான நடிகர் துல்கர் சல்மானும் இந்த படத்தில் நடிக்க உள்ளது தற்போது தெரிய வந்திருக்கிறது. இவர்கள் அத்தனை பேரையும் டேக் செய்து ரஞ்சித் அம்பாடி ரகசியத்தை அம்பலப்படுத்தி விட்டார்.

விக்ரம் படத்திற்கு பிறகு கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படமும் மல்டி ஸ்டார் படம் எனும் நிலையில், அடுத்ததாக 233 மற்றும் 234 படங்களும் மல்டி ஸ்டாரர் படங்களாகவே உருவாக உள்ளது கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: ரிலீஸுக்கு முன்பு இப்படி ஒரு இன்பதிர்ச்சியா? ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைக்கப் போகும் தளபதி

மேக்கப் மேன் இந்த தகவலை கசிய விட்ட நிலையில், அவர் இந்த படத்தில் தொடர்வாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும், கமல்ஹாசன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் முதலில் KH233 படத்தின் அப்டேட்கள் தான் வெளியாக வேண்டும் என்பதில் தெளிவாக அவர் இருந்து வந்த நிலையில், இப்படியொரு காஸ்டிங் தகவல் கசிந்து விட்டதால் நாயகன் செம டென்ஷனில் இருப்பதாக கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top