விடாமுயற்சி லுக்கில் அஜித் - திரிஷா!.. இதுதான் கதைக்காக மெனக்கெடுறதா?!.. வைரல் புகைப்படம்..
Vidamuyarchi: அஜித் நடிப்பில் தயாராக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படப்பிடிப்பிற்காக படக்குழுவை சேர்ந்த டெக்னீஷியன்கள் ஏற்கனவே துபாயில் முகாமிட இன்று அஜித் துபாய் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது. சென்னை விமான நிலையத்தில் உள்ளே நுழைந்ததில் இருந்து துபாயை அடையும் வரை அஜித் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் , புகைப்படங்கள் என இணையத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இதையும் படிங்க: ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ போல… அக்கப்போர்ல சிக்கி தவிக்கும் ஆர்.ஜே.பாலாஜி… விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா […]
Vidamuyarchi: அஜித் நடிப்பில் தயாராக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படப்பிடிப்பிற்காக படக்குழுவை சேர்ந்த டெக்னீஷியன்கள் ஏற்கனவே துபாயில் முகாமிட இன்று அஜித் துபாய் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
சென்னை விமான நிலையத்தில் உள்ளே நுழைந்ததில் இருந்து துபாயை அடையும் வரை அஜித் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் , புகைப்படங்கள் என இணையத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ போல… அக்கப்போர்ல சிக்கி தவிக்கும் ஆர்.ஜே.பாலாஜி…
விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தான் படத்தை தயாரிக்கின்றது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார்.
மிக நீண்ட வருடங்கள் கழித்து அஜித்துடன் த்ரிஷா விடாமுயற்சி திரைப்படத்தின் மூலம் இணைகிறார். ஏற்கனவே அஜித், த்ரிஷா கூட்டணியில் நான்கு ஹிட் படங்கள் வெளிவந்திருக்கின்றன.
இதையும் படிங்க: யாருப்பா ஓல்டு…அவரு தான் கோல்டு…! பிக்பாஸ் சீசன் 7ல் அதிகம் சம்பளம் பவா செல்லத்துரைக்கு தான்!
அதில் விடாமுயற்சி திரைப்படமும் ஐந்தாவது ஹிட் படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் ரசிகர் ஒருவர் படப்பிடிப்பிற்காக சென்ற அஜித் மற்றும் த்ரிஷாவுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றது. அதில் அஜித் எப்பவும் போல் இருக்கும் தோற்றத்தில் தான் காணப்படுகிறார். வித்தியாசமான தோற்றமோ உடல் எடை குறைப்பு, அதிகரிப்பு என எந்த வித்தியாசமும் அஜித்திடம் தெரியவில்லை. இதை கோடம்பாக்கத்தில் சிலர் இதுதான் கதைக்காக மெனக்கிடுதலோ என்று கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லாரன்ஸும் ஜெயம்ரவியும் ஓரமா போய் விளையாடுங்க!.. சித்தா எத்தனை கோடி வசூல் தெரியுமா?!..
ஆனால் இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்றும் யூகிக்க முடியவில்லை. பொதுவாகவே மகிழ் திருமேனி திரைப்படம் என்றால் கொஞ்சம் ஆக்ஷன், த்ரில்லர் போன்ற பல சுவாரஸ்யங்கள் இருக்கும். அஜித்தை வைத்து தரமான ஒரு படத்தைத் தான் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது.