Lucky Bhaskar Review: அமரன், பிளடி பெக்கரல்லாம் இருக்கட்டும்... துல்கரோட லக்கி பாஸ்கர் எப்படி இருக்கு...? இதோ விமர்சனம்..!
அமரன், பிளடி பக்கர், பிரதர் போன்ற படங்களின் வரிசையில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து பார்ப்போம்,
தமிழ் சினிமாவில் இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் பல பிரபலங்களின் திரைப்படங்கள் ரிலீஸ்-ஆகி இருக்கின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன், கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் போன்ற திரைப்படங்கள் இந்த தீபாவளி ரேஸில் இணைந்திருக்கின்றன.
இவர்களுடன் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படமும் இணைந்து இருக்கின்றது. அமரன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பட்டையை கிளப்பி வந்த நிலையில் இன்று திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. எங்கு பார்த்தாலும் அமரன் திரைப்படம் குறித்த பேச்சு தான் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அதேபோல் வளர்ந்து வரும் நடிகரான கவின் பிளடி பெக்கர் திரைப்படமும் மக்களிடையே சிறந்த விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தான் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்ற.ன இந்த மூன்று திரைப்படங்களில் தற்போது டாப்பில் இருப்பது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தான்.
உண்மை கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மக்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படமும் இன்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
பேங்கில் ஒரு கேஷியராக வேலை பார்க்கும் வாழ்க்கையே வாழ்பவர் தான் பாஸ்கர் குமார். கடன் நெருக்கடியால் நேர்மையை தவறும் சூழல் உருவாகின்றது அதன் பிறகு அவர் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சவால்களை அவர் எப்படி சமாளித்தார் என்பதுதான் இப்படத்தின் கதை. மேலும் துல்கர் சல்மான் இந்த கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றார்.
படத்தின் பெரும்பாலான வசனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மீனாட்சி சவுத்ரி தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார். மேலும் ராம்கி, சாய் குமார் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து அதற்கு வலுவூட்டி இருக்கிறார்கள்.
மேலும் பேங்க் மோசடி, ஸ்டாக் மார்கெட் போன்ற காட்சிகள் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கின்றது. துல்கர் சல்மான் திட்டங்கள் அதை செயல்படுத்தும் விதம் அனைத்துமே நம்மை வெகுவளவு கவர்ந்து இருக்கின்றது. எனவே குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக பார்ப்பதற்கு மிகச் சிறந்த படமாக இப்படம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.