அஜித் கேட்ட முதல் சம்பளம்!.. அதுவும் எதற்காக தெரியுமா?!.. அப்பவே அவர் அப்படித்தான்!...

by சிவா |   ( Updated:2024-05-06 16:42:47  )
அஜித் கேட்ட முதல் சம்பளம்!.. அதுவும் எதற்காக தெரியுமா?!.. அப்பவே அவர் அப்படித்தான்!...
X

எம்.ஜி.ஆருக்கு சிவாஜி போல, ரஜினிக்கு கமல்ஹாசனை போல, நடிகர் விஜய்க்கு பல வருடங்களுக்கு போட்டி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தீனா படத்திற்கு பின் அவரின் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்பட்டவர். விஜயை போலவே துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து பின்னர் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறியவர் இவர்.

சாக்லேட் பாய்.. அழகான ஹீரோ என்கிற இமேஜில் பல காதல் கதைகளில் நடித்திருக்கிறார். நிறைய தோல்விப்படங்களையும் கொடுத்திருக்கிறார். பில்லா மற்றும் மங்காத்தா படங்களில் வெற்றி அஜித்தை மாஸ் நடிகராக ரசிகர்களுக்கு காட்டியது. இப்படங்களால் அவருக்கு ரசிகர்களும் அதிகரித்தனர்.

இதையும் படிங்க: ரஜினியின் புதுப்படத்தில் 2 டெரரான வில்லன்களா? வீரா போல மாஸ் காட்டுமாம் வேட்டையன்..!

ஆனால், தைரியமாக தனது ரசிகர் மன்றங்களை கலைத்த நடிகர் அஜித். அதற்கு காரணம் ஒரு தேர்தலில் அவரின் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வேலை செய்தனர். அரசியலோடு தனது ரசிகர்கள் தொடர்பு கொண்டிருப்பதை விரும்பாத அஜித், இது எதிர்காலத்தில் அரசியல்ரீதியாக பிரச்சனையை கொண்டுவரும் என கணக்குப்போட்டே அதை செய்தார்.

திரையுலகில் அப்படி யோசித்த ஒரே நடிகர் அவர்தான். ஒருபக்கம், விஜயின் சம்பளம் ஏற ஏற அஜித்தும் சம்பளத்தை ஏற்றிக்கொண்டே வந்தார். விஜய் வாங்கும் சம்பளத்தில் 80 சதவீதம் அஜித் வாங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். விடாமுயற்சி படத்துக்கு அவருக்கு 110 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Amaravathi

Amaravathi

அடுத்த படத்திற்கு இன்னமும் அவர் அதிகமாக கேட்பார் என்றே எதிர்பார்க்கலாம். ஆனால், நடிக்க வந்த புதிதில் அஜித் இப்படி இல்லை. மிகவும் குறைவான சம்பளத்தில்தான் நடித்தார். அஜித் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிகொண்டிருந்த போது பெரும்பாலும் அவரின் வீட்டின் அருகேயுள்ள ஒரு பைக் மெக்கானிக் கடையில் இருப்பார். அப்போது தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்கிற படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

அந்த கடையில் அவர் இருந்தபோது இயக்குனர் செல்வா மற்றும் தயாரிப்பாளர் சோழா பொண்ணுரங்கம் ஆகியோர் அந்த கடைக்கு அவரை பார்கக வந்தனர். அமராவதி என்கிற படத்தை எடுக்கவிருப்பதாகவும் அதில் நீங்கள் நடியுங்கள் என சொல்ல, சந்தோஷமடைந்த அஜித் அவர்களிடம் கேட்ட சம்பளம் 40 ஆயிரம் ரூபாய். அது எதற்கு எனில் சொந்தமாக பைக் வாங்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்தார். அந்த சம்பளம்தான் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த சம்பளத்தில் ஆசையாக ஒரு பைக்கும் அவர் வாங்கினார்.

Next Story