அஜித் போட்ட கண்டிசன்.. ‘விடாமுயற்சி’ படக்குழு செய்த தவறே இதுதான்! ரிலீஸில் ஏற்படும் சிக்கல்
Actor Ajith: தமிழ் சினிமாவில் இரட்டை குதிரைகளாக ரேஸில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் விஜய் அரசியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த இருப்பதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். இன்னொரு பக்கம் அஜித் ஏற்கனவே தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்.
இவரும் சினிமா ஒரு பக்கம் ரேஸ் ஒரு பக்கம் என இருதலை கொள்ளி எறும்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: எல்லோரும் தயங்கியபோது கமலுக்காக ரிஸ்க் எடுத்த ராஜ்கிரண்… இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..
இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து இப்போதுதான் சூட்டிங்கும் நடைபெற்று கொண்டு வருகின்றன. அதிலும் தற்போதைய நிலவரப்படி அஜர்பைஜானில் ஏற்பட்ட காலநிலை காரணமாக படப்பிடிப்பை நடத்துவதற்கு வேறொரு இடத்தை தேடிக் கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பிப்ரவரியில் படத்தை முடித்து அஜித் மார்ச் மாதத்தில் இருந்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படத்தை எப்படியும் பிப்ரவரியில் முடிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. அதனால் ஆதிக் படமும் தள்ளி போக வாய்ப்பிருக்கிறது. விடாமுயற்சி படத்தின் ரிலீஸும் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு போனா என்ன!.. இருக்கவே இருக்கு.. ஜெயம் ரவி சொன்ன ஐடியாவ பாருங்க!..
ஏனெனில் ஏப்ரல் மாதத்தில்தான் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறதாம். இதன் காரணமாக இந்தியன் 2, வேட்டையன், தங்கலான் போன்ற படங்களின் ரிலீஸும் தள்ளிப் போகும் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார். இதில் ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
இதில் விடாமுயற்சி படக்குழு செய்த ஒரே தவறு படத்தின் டைட்டிலை ஆரம்பத்திலேயே சொன்னதுதான். சொல்லாமல் இருந்திருந்தால் இப்போது அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு இப்பொழுது டைட்டிலை சொல்லி வாயடைத்திருக்கலாம். ஏனெனில் படத்தின் டைட்டிலை தவிற வேறெந்த அப்டேட்டும் கொடுக்கக் கூடாது என அஜித் கூறியிருப்பதாக அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க: கிழிஞ்ச டவுசர்ல மொத்தமும் தெரியுது!… அந்த இடத்தை அழகா காட்டும் லாஸ்லியா..