“வாரிசு படத்த ஒழுங்கா தூக்கிடு”… திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டும் அஜித் ரசிகர்கள்… இந்த அளவுக்கா இறங்குறது!!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார், குஷ்பு, சங்கீதா ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். மேலும் தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே என்ற பாடல் பலரையும் தாளம்போட வைத்தது. துணிவு அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” […]
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார், குஷ்பு, சங்கீதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். மேலும் தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே என்ற பாடல் பலரையும் தாளம்போட வைத்தது.
துணிவு
அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது.
“துணிவு” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு முன்றாவது முறையாக அஜித், ஹெச்.வினோத்துடன் இணைந்துள்ளார். அதே போல் இந்த இருவருடனும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் போனி கபூர்.
“துணிவு” திரைப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் சிங்கிள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு VS வாரிசு
கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதுகின்றன. ஆதலால் இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் சார்பாக லலித் குமார் வெளியிடுகிறார். அதே போல் “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ட்ஸ்டாலின் வெளியிடுகிறார்.
துணிவுக்கு அதிக தியேட்டர்கள்
“துணிவு” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் “வாரிசு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கமுடியாத நிலை வரும் என பலரும் கூறி வந்தனர். மேலும் “வாரிசு” திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின்தான் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இது குறித்து ஒரு பேட்டியில் உதயநிதியிடம் கேட்டபோது “வாரிசு திரைப்படத்தை நான் வெளியிடுவதாக இதுவரை எந்த முகாந்திரமும் இல்லை” என கூறினார். மேலும் மற்றொரு பேட்டியில் “வாரிசு, துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களையும் வெளியிட நேர்ந்தால் எந்த படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குவீர்கள்?” என்று உதயநிதியிடம் கேட்கப்பட்டது.
அப்போது உதயநிதி “தமிழ்நாட்டில் பாதி திரையரங்குகள் துணிவுக்கும், பாதி திரையரங்குகள் வாரிசுக்கும் ஒதுக்குவேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் மோதல்
அஜித்-விஜய் ரசிகர்களுக்குள்ளே எப்போதும் மோதல் வருவது சகஜம்தான். சில நேரங்களில் திரையரங்குகளில் கலவரமே வெடித்துவிடும். அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் தற்போது வெறித்தனத்தின் உச்சக்கட்டத்திற்கே சென்றுள்ளனர். ஆம்!
இதையும் படிங்க: அப்பவே பேன் இந்திய படம் எடுத்த கமல்… இதுக்கும் பிள்ளையார் சுழி போட்டது இவர்தானா??
Varisu VS Thunivu
அதாவது சில ஊர்களில் “வாரிசு” திரையிடப்படும் திரையரங்குகளுக்கு அஜித் ரசிகர்களிடம் இருந்து மிரட்டல் வருகிறதாம். “எப்படி நீங்க துணிவு படத்தை விட்டுவிட்டு வாரிசு திரையிடலாம்” என திரையரங்குகளுக்கு தொலைப்பேசியில் அழைத்து மிரட்டுகிறார்களாம். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.