ஒருநாள் எல்லாரும் என்னை தேடி வருவாங்க!. அப்ப இருக்கு!.. சொன்னதை செய்து காட்டிய அஜித்!..
அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். கதாநாயாகியை உருகி உருகி காதலிக்கும் சாக்லேட் பாய் வேடம். அதன்பின் கிட்டத்தட்ட 30 படங்களில் அதேபோன்ற வேடங்களில்தான் நடித்தார். எல்லாமே காதல் படங்கள். அதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. 90களில் சாக்லேட் பாயாக மட்டுமே பார்க்கப்பட்டார். ஆனால், ஆசை படத்தில் அழகாக நடித்திருந்தாலும் அஜித்துக்கு இருந்த ஆசை அது அல்ல. ஹாலிவுட் நடிகர்கள் போல ஆக்ஷன் ஹீரோ, மாஸ் ஹீரோ, விதவிதமான நல்ல […]
அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். கதாநாயாகியை உருகி உருகி காதலிக்கும் சாக்லேட் பாய் வேடம். அதன்பின் கிட்டத்தட்ட 30 படங்களில் அதேபோன்ற வேடங்களில்தான் நடித்தார். எல்லாமே காதல் படங்கள். அதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. 90களில் சாக்லேட் பாயாக மட்டுமே பார்க்கப்பட்டார்.
ஆனால், ஆசை படத்தில் அழகாக நடித்திருந்தாலும் அஜித்துக்கு இருந்த ஆசை அது அல்ல. ஹாலிவுட் நடிகர்கள் போல ஆக்ஷன் ஹீரோ, மாஸ் ஹீரோ, விதவிதமான நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. அதனால்தான் சரணின் இயக்கத்தில் அமர்க்களம், அசல், அட்டகாசம் போன்ற ஆக்ஷன் படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: அஜித் நினைச்சிருந்தா பண்ணிருக்கலாம்… கிட்ட கூட உட்காரவிடல.. பாவா லெட்சுமணனின் உருக்கமான பதிவு…
பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் அஜித்தின் ஆசையை நிறைவேற்றியது. இந்த படங்கள் மூலம்தான் அவர் மாஸ் ஹீரோவாக மாறினார். அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகரித்தது. ரசிகர் மன்றங்களும் உருவானது. ஒருகட்டத்தில் விஜய்க்கு டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார்.
இப்போதுவரை திரையுலகில் அஜித் - விஜய் போட்டி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விஜயின் வாரிசு படம் வெளியானபோது தனது துணிவு படத்தை துணிந்து வெளியிட்டு வெற்றியும் பெற்றார். இப்போது விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துபாயில் துவங்கவுள்ளது.
அஜித் திரையுலகினர் யாருடனும் ஒட்டுவது இல்லை. யாரிடமும் பேசுவது இல்லை. ரசிகர்களை சந்திப்பது இல்லை. அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை. அதற்கு பின்னணியில் பல காயங்களும், அவமானங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் ஏணியாய் இருந்தவரை மறக்கலாமா? அஜித்துக்கு இருக்கும் பெரிய பொறுப்பு
90களில் தொடர்ந்து காதல் படங்களில் நடித்துகொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் ‘எத்தனை நாட்களுக்குதான் ஹீரோயினுக்கு புரபோஸ் பண்ணும் சாக்லேட் பாயாகவே நடித்து கொண்டிருக்க போகிறீர்கள்?’ என கேட்டார். அதற்கு பதில் சொன்ன அஜித் ‘ இப்போது நான் மத்தவங்ககிட்ட வாய்ப்பு கேட்கும் நிலையில் இருக்கேன். அதனால், அவர்கள் சொல்லும் வேடத்தில் மட்டுமே என்னால் நடிக்க முடியும். ஒரு காலம் வரும். அஜித்தான் நம்ம படத்துல நடிக்கணும்னு தேடி வருவாங்க. அப்போது நான் விரும்பும் கதாபாத்திரங்களில் நடிப்பேன்’ என சொன்னார்.
அவர் சொன்ன போது போலவே முன்னணி மாஸ் ஹீரோவாக மாறி அவருக்கு பிடித்தமான கதாபத்திரங்களில் அஜித் இப்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இப்பவும் அஜித் இத செய்யலைனா அவ்ளோதான்! – பகீர் தகவலை சொன்ன பிரபலம்..