Connect with us
bava lakshmanan

Cinema News

அஜித் நினைச்சிருந்தா பண்ணிருக்கலாம்… கிட்ட கூட உட்காரவிடல.. பாவா லெட்சுமணனின் உருக்கமான பதிவு…

Actor Bavalakshmanan: பாவா லட்சுமணன் தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் படங்களில் பலவற்றிலும் காமெடி காட்சிகளில் வருவது உண்டு. இவர் வின்னர், மாயி, கோவை பிரதர்ஸ் போன்ற பல திரைப்படங்களின் மூலம் காமெடியனாக வலம் வந்தார்.

மாயி படத்தில் வாம்மா மின்னல் காமெடியின் மூலம் மக்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்த்தவர் பாவா லெட்சுமணன். விமல், சிவா நடிப்பில் வெளியான கலகலப்பு திரைப்படத்தில் இவரின் காமேடி பார்ப்பவர்களை ரசிக்க செய்யும் விதமாக இருந்தது.

இதையும் படிங்க:போனஸ் மேல போனஸ அள்ளி வீசும் சன்பிக்சர்ஸ்…எல்லாம் ஜெயிலர் செஞ்ச வேலைதான்…

இவரை வடிவேலுவுடன் அதிக காமெடிகளில் நடித்திருப்பார். இவர் சமீபத்தில் காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு பல சினிமா பிரபலங்களும் தங்களது உதவியை செய்து வந்தனர்.

யாரென்று தெரியாத மனிதர்கள் கூட உதவி செய்ததாக கூறியிருந்தார். ஆனால் இவருடன் பல காமெடிகளில் நடித்த வடிவேலு இவருக்கென்று சிறு உதவி கூட செய்யாதது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மயில்சாமி, விவேக் போன்றவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தனக்கு கண்டிப்பாக உதவிகரம் நீட்டியிருப்பர் என உருக்கமாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க:என்னய்யா!… எங்களுக்கு ஆப்பு வச்சிருவீங்க போலயே… அதிர்ந்து போன இறைவன் படக்குழு…

விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்த பாலா தனக்கு பெரிய அளவில் பழக்கம் இல்லை எனவும் அவர் கூட தனக்கு 30000 ரூபாய் கொடுத்து உதவினார் எனவும் மேலும் சந்தானம் போன்ற பல பிரபலங்களும் தனக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கேப்டனின் பிறந்த நாளன்று அவரை காண சென்றுள்ளார். இவரை பார்த்த உடன் விஜயகாந்த் கால் சரியாகிவிட்டதா என கேட்டாராம். மேலும் அவரின் மனைவி இவருக்கு சில தொகையை உதவியாக கொடுத்தாராம்.

ஆனால் இவர் உடல்நிலை சரியில்லாதபோது பல முறை அஜித்தின் வீட்டிற்கு சென்றதாகவும் அவரின் மேனேஜர் அவர சந்திக்க விடவில்லை எனவும் அஜித் நினைத்திருந்தால் நிச்சயம் எனக்கு உதவி செய்திருக்கலாம் எனவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் தன்னை போன்ற துணை நடிகர்களை பெரிய நடிகர்கள் பக்கம் கூட உட்கார விடமாட்டார்கள் என  சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:KH234-வில் மேலும் 2 நடிகர்கள்!.. லியோவுக்கே டஃப் கொடுக்கும் மணிரத்னம்… பெரிய சம்பவமே இருக்கு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top