என்னய்யா!… எங்களுக்கு ஆப்பு வச்சிருவீங்க போலயே… அதிர்ந்து போன இறைவன் படக்குழு…

0
555
iraivan movie

தமிழில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவரின் சகோதரரான மோகன்ராஜ் இயக்கத்தில் உருவான படம்தான் ஜெயம். அறிமுகமான முதல் படமே இவருக்கு பெரும் வெற்றியை தேடி தந்தது.

இவர் பின் எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி, சம்திங் சம்திங் போன்ற திரைப்படங்களில் நடித்தார். காதல் கலந்த நடிப்பிற்கு மிக பொருத்தமாக இருப்பவர். பேராண்மை என்ற திரைப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கும் பொருத்தமானவர் என்பதை நிரூபித்தார்.

இதையும் வாசிங்க:பூமர் ஆண்ட்டிஸ் போட்ட கமெண்ட்கள்… ஒரே போஸ்டால் அழுகவிட்ட அசோக்செல்வன்… அப்புடி!

பின் மிருதன், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் காமெடி கலந்த படமான கோமாளி படத்தில் நடித்தார். 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமான இப்படமும் இவருக்கு வெற்றியை சம்பாதித்து கொடுத்தது.

இவர் தற்போது இயக்குனர் ஐ.அஹமத் இயக்கத்தில் இறைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது படக்குழுவினருக்கு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இதையும் வாசிங்க:போனஸ் மேல போனஸ அள்ளி வீசும் சன்பிக்சர்ஸ்…எல்லாம் ஜெயிலர் செஞ்ச வேலைதான்…

அதன்படி பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் சந்திரமுகி2. இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரவிருந்தது. ஆனால் படத்தில் டெக்னிகல் வேலைகள் இருப்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு படக்குழு மாற்றி அமைத்துவிட்டது.

சத்திரமுகி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் விநியோகிக்கவிருக்கிறது. மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் நடிகர் சித்தார் நடிப்பில் வெளிவரவுள்ள சித்தா திரைப்படத்தையும் விநியோகிக்க உள்ளனர். இந்த இரண்டு படங்களையும் ஒரே நிறுவனம் எடுத்து கொண்ட நிலையில் தங்களது படத்திற்கு கிடைக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்து விடுமோ என படக்குழு அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எது எப்படியோ எந்த படமாக இருந்தாலும் படத்தின் கதை நன்றாக இருக்கும்பட்சத்தில் அது மக்கள் மனதில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதையும் வாசிங்க:லேடி சூப்பர்ஸ்டாருலாம் ஓரமா போ… இனி என் ஆட்டம் தான்… மிரட்டும் த்ரிஷாவின் புதிய அவதாரம்!

google news