Connect with us

Cinema News

லேடி சூப்பர்ஸ்டாருலாம் ஓரமா போ… இனி என் ஆட்டம் தான்… மிரட்டும் த்ரிஷாவின் புதிய அவதாரம்!

Trisha: நடிகை த்ரிஷா பல நாட்களாக மார்க்கெட் இல்லாமல் ஒரே ஒரு வெற்றி படத்துக்காக துடித்து வந்தார். ஆனால் தற்போது மீண்டும் கோலிவுட் அவரை புகழ் உச்சிக்கு தூக்கி சென்று இருக்கிறது.

ஒருகட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை த்ரிஷா. அவருக்கும் அசினுக்கும் தான் போட்டியாக இருந்தது. காலங்களும் உருண்டிச்சு. அசின் திருமணம் செய்து கொண்டு ஒரு பொண்ணுக்கு அம்மாவே ஆகிட்டாங்க. ஆனா த்ரிஷா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இதையும் படிங்க: வீலிங் செஞ்சதால அவன் விழல… தெரியாம பேசாதீங்க… தலையில் பெரிய அடி!… டிடிஎஃப் வாசனின் நண்பர் சொன்ன ஷாக்!

ஆனால் ஒரு நேரத்தில் முன்னணி நடிகர்கள் த்ரிஷாவை தங்களுடைய படங்களில் புக் செய்யாமல் தவிர்த்து வந்தனர். இதனால் கிடைக்கும் படங்களை ஓகே செய்து அதில் நடித்து வந்தார். அவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் சொற்ப வருமானம் கூட வாங்காமல் திரையரங்கை விட்டு ஓடியது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தினை பெற்றார். அவரை தான் எல்லா நடிகர்களும் புக் செய்து வந்தனர். இதனால் த்ரிஷாவின் கேரியரே முடியும் நிலை உருவாகியது. அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்தவர் தான் மணிரத்னம். தன்னுடைய கனவு ப்ராஜெக்டான பொன்னியின் செல்வனில் த்ரிஷாவை குந்தவையாக நடிக்க வைத்தார். அந்த கதாபாத்திரத்தில் அம்மணி பின்னி பெடல் எடுக்க மீண்டும் தீ பற்றி கொண்டது.

தமிழ் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக எல்லா மொழிகளிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது. லோகேஷ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் ‘லியோ’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தி ரோடு என்ற படமும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

இதையும் படிங்க: KH234-வில் மேலும் 2 நடிகர்கள்!.. லியோவுக்கே டஃப் கொடுக்கும் மணிரத்னம்… பெரிய சம்பவமே இருக்கு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top